Monday, January 17, 2011

12 வகையான யஜ்ஞங்கள்.

பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் அர்ஜுனனுக்கு 12 வகையான யஜ்ஞங்களை உபதேசம் செய்கிறார். ஆன்மிக வாழ்க்கையின் சாதனைகள் அனைத்தும் இங்கு யஜ்ஞங்களாக உருவகப்படுத்தப் படுகின்றன.


தைவமேவாபரே யஜ்ஞம் யோகின: பர்யுபாஸதே

ப்ரஹ்மாக்னாவபரே யஜ்ஞம்

யஞ்யேனைவோப ஜூஹ்வதி 4.25

1. ப்ரஹ்மஞான யஜ்ஞம்
ஜீவாத்மாவை பரமாத்மாவாகப் புரிந்து கொள்வது ப்ரஹ்மஞான யஜ்ஞம். ப்ரம்மமாகிய அக்னியில் தன்னைத்தானே ஹோமம் செய்யும் யஜ்ஞம் இது. இதில் அக்னி - பரமாத்மா. ஹவிஸ் - ஜீவாத்மா. அக்னியில் போட்ட ஹவிஸ் அக்னிமயமாவது போல் இந்த யஜ்ஞத்தில் ஜீவாத்மா தன்னைப் பரமாத்மாவாக உணருகிறது. சிலர் இந்த யஜ்ஞத்தைச் செய்கிறார்கள் என்கிறார் ஸ்ரீக்ருஷ்ணர்.
8.இது நாம் சாமான்யமாக அறிந்திருக்கும் அக்னியில் ஹவிஸ்ஸை ஹோமம் (தியாகம்) செய்யும் யஜ்ஞம்.
ச்ரோத்ராதீனீந்த்ரியாண்யன்யே

ஸம்யமாக்னிஷுஜுஹ்வதி

சப்தாதீன்விஷயானன்யே

இந்த்ரியாக்னிஷு ஜுஹ்வதி 4.26



புலனடக்கத்தை இரண்டாகப் பிரித்து பகவான் இங்கு ஹோமமாகச் சொல்கிறார்.
3. இந்த்ரிய நிக்ரஹ யஜ்ஞம்
ஸம்யமம் என்றால் கட்டுப்பாடு.. ஸம்யமம் என்ற அக்னியில் ச்ரோத்ராதி (கண், காது முதலான ) இந்த்ரியங்களை ஆஹுதி பண்ணும் யஜ்ஞம் இந்த்ரிய நிக்ரஹ யஜ்ஞம். இந்த்ரிய விஷயங்களை விட்டுவிட்டு (தர்மமாகக்கூட அனுபவிக்காமல்) கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது. இதில் அக்னி - ஸம்யமம். ஹவிஸ் - இந்த்ரியங்கள்.
4. விஷயக்ரஹண யஜ்ஞம்
விஷயங்களை த்யாகம் செய்யாமல் அளவாக தர்மமாக அனுபவிப்பது. இங்கு அக்னி - இந்த்ரியங்கள். ஹவிஸ் - இந்த்ரிய விஷயங்கள். ஒப்பிடுக: - 2.64
ஸர்வாணீந்த்ரியகர்மாணி

ப்ராணகர்மாணி சாபரே

ஆத்மஸம்யமயோகாக்னௌ

ஜுஹ்வதி ஞானதீபிதே. 4.27
5. ஆத்மஸம்யம யஜ்ஞம்
இந்த்ரிய விஷயங்களின் தன்மை என்னவென்று நன்கு உணர்ந்து,சாஸ்த்ரங்கள் கூறிய அறவழியில் நடந்து அறிவுபூர்வமாக மனத்தைக் கட்டுப்படுத்தி மூச்சுக்காற்று மற்றும் கர்மேந்த்ரிய ஞானேந்த்ரிய வ்யாபாரம் (பொறிகளின் செயல்பாடுகள்) அனைத்தையும் மனத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஆத்மஸம்யம யஜ்ஞம். அதாவது, அளவான, தரமான நெறிப்படுத்தப்பட்ட எண்ணங்களோடு இருப்பதே ஆத்மஸம்யம யஜ்ஞம். இங்கு, அக்னி - மனக்கட்டுப்பாடு. ஹவிஸ் - இந்த்ரியங்களின் செயல்கள்.
த்ரவ்யயஞாஸ்தபோயஜ்ஞா:

யோகயஜ்ஞாஸ்ததாபரே

ஸ்வாத்யாயஞானயஜ்ஞாஸ்ச

யதய: ஸம்சிதவ்ரதா: 4.28
‘வ்ரத அனுஷ்டானத்தின் மூலம் தங்கள் புத்தியை நன்கு தீட்டிக்கொண்ட யதிகள் சிலர் கீழ்வரும் யஜ்ஞங்களை அனுஷ்டிக்கிறார்கள்’ என்று தொடர்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணர்
6. த்ரவ்யயஜ்ஞம்:
தன் பொருளை பிறர்க்கு தானமாகக் கொடுப்பது த்ரவ்யயஜ்ஞம். தானத்தின் லக்ஷணத்தைக் கூறுகையில் ‘என்னுடையது’ என்ற புத்தியை விடுவது தானம் என்கிறார் ஸ்ரீ பகவத்பாத சங்கரர்; தானம் செய்வது சித்தசுத்திக்கு ஒரு ஸாதனம். அதனால் லோப (தானே எல்லாம் அடையவேண்டும் என்ற ஆசை) புத்தி போய் பரம சாந்தி கிட்டும். த்ரவ்ய யஜ்ஞத்தில் வாங்குபவன் கை - அக்னி. கொடுக்கும் பொருள் - ஹவிஸ்.
7. தபோயஜ்ஞம்
தானாகவே விரும்பி தன் சுகங்களைக் குறைத்துக்கொள்வது ‘தபஸ்’. உதாரணம்: மௌனவிரதம், உண்ணாவிரதம், குளிர்காலத்தில் வெந்நீரில் குளிக்காமல் இருப்பது, வெயில் காலத்தில் தினம் சிறிது நேரமாவது மின்விசிறி, ஏ.சி. இல்லாமல் இருப்பது - போன்றவை.
8. யோக யஜ்ஞம்
பதஞ்சலி மகரிஷியின் அஷ்டாங்கயோகம் தான் இங்கு விசேஷமாகச் சொல்லப்படுகிறது. யோகம் என்றால் இங்கு ஒழுக்கம் என்று குறித்துக்கொள்ளலாம். இயமம், நியமம், ஆஸனம் ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணை, த்யானம், ஸமாதி என்பன அஷ்டாங்க யோகமாகும். ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஒழுக்கமின்மையை நீக்கிவிடுவது யோகயஜ்ஞம். உடல், மனம், அறிவு, ஒழுக்கம் எல்லாம் இதில் அடங்கும். இங்கு அக்னி - ஒழுக்கம். ஹவிஸ் - ஒழுக்கமின்மை.
9. ஸ்வாத்யாய யஜ்ஞம்
பாராயணம் செய்வது, மந்த்ரங்களை மனப்பாடம் செய்வது போன்றவை ஸ்வாத்யாய யஜ்ஞமாகும். தொடர்ந்து இவற்றைச் செய்து வந்தால் மனத்தில் நன்கு பதிந்து விடுகிறது. புத்தகம் இல்லாமலேயே சந்தர்ப்பத்திற்கேற்ப படித்த நல்ல விஷயங்கள் கை கொடுத்து ப்ரச்னைகளைக் களைய உதவும். மன அமைதி உண்டாகிறது. தனிமனித சாந்தி மட்டுமல்லாமல் சமுதாய சாந்தியும் உண்டாகிறது. இதில் அக்னி - மறதியின்மை. ஹவிஸ் - மறதி.
10 ஞான யஜ்ஞம்
விசாரம் பண்ணுவது , பொருள் உணர்ந்து பாராயணம் செய்வது, போன்றவை ஞானயஜ்ஞமாகும்.

அபானே ஜூஹ்வதி ப்ராணம்

ப்ராணே(அ)பானம் ததாபரே

ப்ராணபானகதீ ருத்வா

ப்ராணாயாம பராயணா: 4.29
11. ப்ராணாயாம யஜ்ஞம்
இதை தமிழில் வாசியோகம் என்பர். ‘சரீர அந்தஸ்ஸஞ்சாரீ வாயு: ப்ராண:’ - அதாவது உடம்புக்குள்ளே ஸஞ்சரிக்கும் வாயுவிற்கு ப்ராணன் என்று பெயர். - என்று தர்க்க சாஸ்த்ரம் ப்ராணனுக்கு லக்ஷணம் சொல்கிறதுஆயாமம் என்றால் செம்மைப்படுத்துவது. உடலுக்குள்ளே ஸஞ்சரிக்கும் காற்றை ஒழுங்குபடுத்தும் முறைக்கு ப்ராணாயாமம் என்று பெயர். இது பூரகம், அந்த: கும்பகம், ரேசகம், பாஹ்ய கும்பகம் என்று நான்கு அங்கங்களைக் கொண்டது.
பூரகம் - அபானே ப்ராணம் ஜூஹ்வதி - வெளியில் உள்ள காற்றை உள்ளே இழுப்பது. இதில் அக்னி - அபானன். ஹவிஸ் - ப்ராணன்.
ரேசகம் - ப்ராணே அபானம் ஜுஹ்வதி - உள்ளிருக்கும் காற்றை வெளியில் விடுவது.
இதில் அக்னி - ப்ராணன். ஹவிஸ் - அபானன்.
ப்ராணாயாம யஜ்ஞமானது அந்தக் கரணத்தை நன்கு சுத்தம் செய்து பெரிய க்ஷேமத்தைத் தரக்கூடியது. ப்ராணாயாம கோசத்தைச் சரிச் செய்தால் அன்னமய, மனோமய கோசங்களுக்கு நன்மை உண்டாகும். விவேகபூர்வமாக ப்ராணனை ஜெயிப்பதன் மூலம் ரோகத்தை வெல்லலாம். மனத்தை வெல்லலாம். மனமும் மூச்சும் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. சுவாசத்தைச் சரிப்படுத்தினால் எண்ணங்கள் சரியாகும். எண்ணங்களைச் சரிப்படுத்தினால் சுவாசம் சரியாகும். அதனால்தான் எந்தக் கர்மாவாக இருந்தாலும் ப்ரம்மசர்யம், ஸன்யாஸம் போன்ற எந்த நிலையாக இருந்தாலும் ப்ராணாயாமம் இன்றியமையாதது.
அபரே நியதாஹாரா:
ப்ராணான்ப்ராணேஷூ ஜூஹ்வதி
ஸர்வே(அ)ப்யேதே யஜ்ஞவித:
யஜ்ஞக்ஷ பித கல்மஷா: 4.30
12. ஆஹாரநியம யஜ்ஞம்
“மற்ற சிலர் ஆகாரத்தை நியமத்தோடு செய்து கொண்டு ப்ராணனில் ப்ராணனை ஹோமம் செய்கிறார்கள்” என்று ஸ்ரீக்ருஷ்ணர் தொடர்கிறார்.
இங்கு ப்ராணனே அக்னி. ப்ராணனே ஹவிஸ். ‘அநியதப்ராணான் நியதப்ராணேஷு ஜுஹ்வதி’- அதாவது முறையற்ற சுவாஸ விஷயங்களை முறையாக மாற்றுவதற்கு அனுகூலமாக ஆகார நியமங்களைக் கடைப்பிடிக்கிறார்கள். ஏனென்றால் ஆகார நியமம் ப்ராணனை ஒழுங்குபடுத்துகிறது. “ப்ராணே சரீரம் ப்ரதிஷ்டிதம். சரீரே ப்ராண: ப்ரதிஷ்டித:” என்பது தைத்திரீய உபநிஷத் வாக்கியம். அன்னத்திற்கும் ப்ராணனுக்கும் சம்பந்தம் இருக்கிறது.
த்வௌபாகம் பூரயேதன்னம்

தோயேனைகம் ப்ரபூரயேத்

மாருதஸ்ய ப்ரசாரார்த்தம்

சதுர்த்தம் அவசேஷயேத்
என்று உண்ணும் நியதி கூறப்பட்டிருக்கிறது. அரை வயிற்றுக்கு உணவும் கால் வயிறு நீரும் உட்கொண்டு மீதம் கால் வயிறு வாயுவிற்கு ஒதுக்கவேண்டும். உண்பதையே ஒரு யாகமாகச் செய்வதற்கு ப்ராணாக்னிஹோத்ரம் என்று பெயர். எத்தகைய உணவு உண்ணத்தக்கது, எது தகாதது என்று ஆயுர்வேதம் நிர்ணயம் செய்கிறது. எந்த உணவை எவ்வாறு உண்ணவேண்டும் என்றும் முறை உள்ளது. உண்பதற்கு முன்பு அன்னத்தைச் சுத்தி செய்வதற்கு ‘பரிக்ஷேசனம்’ முதலிய ஸம்ஸ்காரங்கள் கூறப்பட்டிருக்கின்றன. எந்த உணவை எப்படி சமைக்க வேண்டும் என்பதற்கும் விதிமுறைகள் கூறப்பட்டிருக்கின்றன. உணவு சமைப்பவனின் மனநிலைக்கேற்ப சமைக்கப்பட்ட உணவு குணத்தையோ (நல்ல தன்மை) தோஷத்தையோ (கெட்ட தன்மை) அடைகிறது. இதற்கு ஆச்ரய குண: ஆச்ரய தோஷ: என்று பெயர். இதைப்பற்றி ஸ்ரீ இராமானுஜர் விசேஷமாகப் பேசியிருக்கிறார். சமைப்பவர்க்கும் ஸ்னான ஜபாதி நியமங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. மந்த்ரபூர்வமாகத்- தான் சமைக்கவேண்டுமென்பது நமது பண்டைய கலாசாரம். இந்த நம் கலாசாரம் இன்று எங்கோ காணாமல் போய்விட்டது.
இந்த 12 வித யஜ்ஞங்களையும் பற்றி அறிந்தவர்கள் யஜ்ஞானுஷ்டானத்தின் மூலம் கல்மஷங்களை (மாசுகளை) எல்லாம் நீக்கிக்கொள்கிறார்கள்” என்கிறார் பகவான்.
‘சிலர் இந்த யஜ்ஞத்தைச் செய்கிறார்கள். வேறு சிலர் அந்த யஜ்ஞத்தைச் செய்கிறார்கள்’ என்று ஸ்ரீக்ருஷ்ணர் சொன்னாலும் - இவையெல்லாம் ஆன்மிக சாதனைகளாதலால் எல்லாரும் எல்லா யஜ்ஞங்களையும் செய்தேயாக வேண்டும். இதில் சிலீஷீவீநீமீ அல்லது ஷீஜீtவீஷீஸீ கிடையாது. சாஸ்திரத்தில் ச்ரத்தை, ஈச்வரனிடத்தில் பரிபூர்ண பக்தி, தர்மத்தை அனுஷ்டிப்பதில் ருசி, ஆகியன இருந்தால் இந்த யஜ்ஞங்களை சிரமமே இல்லாமல் அனாயாஸமாகப் பண்ணலாம். ஒருவனின் புத்தி இந்த தர்ம மார்க்கத்தில் ப்ரவர்த்திக்க வேண்டும் என்பதற்காகத்தான் காயத்ரி மந்த்ரத்தின் மூலம் சூர்ய பகவானை ‘தியோ யோ ந: ப்ரசோதயாத்’ என்று வேண்டுவது.
யஜ்ஞசிஷ்டாம்ருதபுஜ:

யாந்தி ப்ரஹ்ம ஸனாதனம்

நாயம் லோகோ(அ)ஸ்த்யயஜ்ஞஸ்ய

குதோ(அ)ன்ய: குருஸத்தம 4.31
கண்ணன் தொடர்கிறார்: - ஹே! குருவம்சத்து உத்தமனே! யஜ்ஞமிச்சமாகிய அம்ருதத்தை உண்பவர்கள் (யஜ்ஞ பலனைப் பெற்றவர்கள் யஜ்ஞத்தின் மூலம் சித்தசுத்தி அடைந்தவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்) யாண்டும் உள்ள இறைவனை அடைகிறார்கள். ஜீவாத்ம புத்தி நீங்கி பரமாத்மாவாகவே தன்னை உணருகிறார்கள். இந்த யஜ்ஞங்களைப் பண்ணினால்தான் தர்மமான சுகம் கிடைக்கும். யஜ்ஞம் பண்ணாதவர்களுக்கு இந்த லோக சுகமே இல்லை. பிறகு பரலோக சுகத்தைப்பற்றிக் கேட்கவும் வேண்டுமோ?”

No comments:

Post a Comment