Thursday, January 6, 2011

40ஸம்ஸ்காரங்களாவன:

40ஸம்ஸ்காரங்களாவன:


1.கர்பாதானம், 2.பும்ஸவனம், 3.ஸீமந்த்ம், 4.ஜாதகர்ம, 5.நாமகரணம், 6.அன்னப்ராசனம், 7.சௌளம், 8.உபநயனம், 9.ப்ராஜாபத்ய, சௌம்ய, ஆக்நேய, வைச்வதேவ என்று நான்கு வேத வ்ரதங்கள், 13.ஸமாவர்தனம், 14.விவாஹம், தேவ, பித்ரு, மனுஷ்ய, பூத ப்ரும்ம யஜ்ஞம் என்று பஞ்ச மஹா யஜ்ஞங்கள்

அஷ்டகா-அந்வஷ்டகா, பார்வணம், ஸ்தாலீபாகம், ஆக்ரஹாயணீ, ச்ராவணீ, சைத்ரீ, ஆச்வயுஜீ என்று ஏழு பாக யஜ்ஞங்கள், அக்நி ஆதானம், அக்னிஹோத்ரம், தர்ச,பூர்ணமாசம், ஆக்ரயணம், சாதுர்மாஸ்யம், நிரூட பசுபந்தம், ஸெளத்ராமணி என்று ஏழு ஹவிர் யஜ்ஞங்கள் அக்னிஷ்டோமம், அத்யக்னிஷ்டோமம், உக்த்யம், ஷோடசீ, வாஜபேயம், அதிராத்ரம், அப்தோர்யாமம் என்று 7 ஸோம ஸம்ஸ்தைகள் ஆக 40 ஸம்ஸ்காரங்கள் இதில் பாதி ஸ்மார்த்த கர்மா, பாதி யஜ்ஞங்களான ச்ரௌத கர்மா, இப்படி 40 ஸம்ஸ்காரங்களாலே ப்ராஹ்மணன் ஜ்வலிக்கிறான். எப்படி பாத்திரம் தேய்க்க தேய்க்க ஜ்வலிக்கிறதோ அதுமாதிரி இந்த ஸம்ஸ்காரங்கள் கர்பாதானம், பும்ஸவனம், ஸீமந்தம் இதெல்லாம் கர்பத்லேயே அவனுக்கு ப்ராஹ்மணத்துவத்த ஏற்படுத்தக்கூடிய ஸம்ஸ்காரங்கள். இதெல்லாம் செஞ்சா என்ன செய்யாத போனா என்ன என்று நினைக்கக் கூடாது. ஒரு ஸம்ஸ்காரத்த ஒருத்தன் செய்யலேன்னா அடுத்த ஸம்ஸ்காரத்துக்கு அவனுக்கு தகுதி கிடையாது.

No comments:

Post a Comment