Monday, January 17, 2011

ப்ராணாயாமம்

அதாவது உடம்புக்குள்ளே ஸஞ்சரிக்கும் வாயுவிற்கு ப்ராணன் என்று பெயர். - என்று தர்க்க சாஸ்த்ரம் ப்ராணனுக்கு லக்ஷணம் சொல்கிறது.

ஆயாமம் என்றால் செம்மைப்படுத்துவது. உடலுக்குள்ளே ஸஞ்சரிக்கும் காற்றை ஒழுங்குபடுத்தும் முறைக்கு ப்ராணாயாமம் என்று பெயர். இது பூரகம், அந்த: கும்பகம், ரேசகம், பாஹ்ய கும்பகம் என்று நான்கு அங்கங்களைக் கொண்டது.
பூரகம் - அபானே ப்ராணம் ஜூஹ்வதி - வெளியில் உள்ள காற்றை உள்ளே இழுப்பது. இதில் அக்னி - அபானன். ஹவிஸ் - ப்ராணன்.
ரேசகம் - ப்ராணே அபானம் ஜுஹ்வதி - உள்ளிருக்கும் காற்றை வெளியில் விடுவது.
இதில் அக்னி - ப்ராணன். ஹவிஸ் - அபானன்.

No comments:

Post a Comment