Thursday, January 27, 2011

அஷ்டாங்க யோகம்

அஷ்டாங்க யோகம்
பதஞ்சலி யோகம் என்றும் அஷ்டாங்க யோகம் என்றும் அழைக்கப்படும் யோக முறைகள் பதஞ்சலி என்ற முனிவரால் உருவாக்கப்பட்டவை. பழங்காலத்தில் பதஞ்சலி முனிவரின் தரிசனமாக (மதமாக) இவை கடைபிடிக்கப் பட்டிருக்கலாம். இந்த அஷ்டாங்க யோகம் என்பது எட்டு அங்கங்களை கொண்டது.அஷ்டாங்க யோகத்தில் முதலாவது யமம் – அஹிம்சை, சத்தியம், திருடாமல் பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருத்தல், ப்ரம்மசர்யம், போகப்பொருள்களை தவிர்த்த நிலை ஆகியவை கொண்ட வாழ்வே “யமா” அல்லது யமம் எனப்படும். அடுத்தது நியமம்,தூய்மையாக இருத்தல், சுகம் துக்கம், பிடித்தது பிடிக்காதது என்று நேரும்போது அமைதியாய் நடுநிலையாய் இருத்தல், தவம், கற்றல், எல்லாவற்றையும் ஈஸ்வரனுக்கு அர்ப்பணித்து தன் கடமைகளை செய்தல் ஆகியவை நியமத்தில் அடங்கும்.இதுவரை சொன்னவை வாழ்க்கைமுறை. இனி உள்ளத்துக்காக செய்யக்கூடிய த்யான முறையாவன,அசைவின்றி சுகமான வகையில் கஷ்டப்படுத்திக்கொள்ளாமல் அமரவேண்டும். ஆசனம் அமைந்தபிறகு, ப்ராணாயாமம் என்ற முறையில் சுவாசத்தை கட்டுப்படுத்துவது. சுவாசங்கள் பலவகைப்படும். அத்தகைய சுவாசங்களுக்கு கால அளவுகளும் உண்டு.புலன்களை அடக்குதல், மனதை பழக்கி ஒருநிலை கொண்டு அதிலேயே அடங்கிவிடும் நிலை ப்ரத்யாஹாரம் எனப்படும்.ஒரு நேரத்தில் ஒரே பொருளில் மனதை லயிக்கவிடுவது, மற்ற எல்லா இடையூறுகளையும் விலக்கி ஏகாக்ர சிந்தை என்பதைப்போல் ஒன்றையே தொடர்ந்து சிந்தித்து மனதை நிலை நிறுத்தி வைத்தல் தாரணா எனப்படும்.தாரணா நிலையில் மனதை ஒருமைப்படுத்தி, பக்தியுடன் “தைலதாரை” என்ற எண்ணை கொட்டுவதைப்போல் இடைவிடாமல் தொடர்ந்து மனம் லயிப்பதே த்யானம் எனப்படும்.இந்த அஷ்டாங்க யோகத்தின் கடைசி நிலை, சமாதி எனப்படும்.எதை தாரணா மற்றும் த்யான நிலைகளில் மனதில் லயிக்க விடுகிறோமோ அதாகவே ஆகி இரண்டர கலந்து ஒன்றாகிவிடுதலே சமாதி எனப்படும் எட்டவது நிலையாகும். இதற்கு முந்தைய நிலைகளில் செய்பவர், செயல், அதன் விளைவு என்பது இருக்கிறது. ஆனால் சமாதி நிலையில் இவையெல்லாம் ஒன்றாக கலந்து விடுகின்றன.

யாமா (விதிகள் / வரையறைகள்)
நிர்யாமா (தனிமனித ஒழுக்கம்)
ஆசனா (யோகா செய்யும் முறைகள்)
ப்ராணாயமா (மூச்சுப்பயிற்சி)
ப்ரத்யஹாரா (விடுபடுதல்)
தாரணா (குறிப்பிட்டவைகள் மீது ஒருநிலைப்படுத்துதல்)
தியானா (தியானம்)
சாமாதி (தீர்வு) இதில் குறிப்பிட்ட யோகாவை எடுத்துக்கொண்டால் அதில்
பக்தி யோகா
கர்ம யோகா
பதஞ்சலி யோகா முறை
ஜனன யோகா
ஹத்த யோகா
குண்டலினி யோகா என்று பிரிவுகள் உண்டு... யோகா சிறந்ததொரு முறை என்பதும், அதில் நம் முன்னோரின் ஆழ்ந்த அறிவு - மனத்துக்கு பயனளிக்கும் வகையில் செறிந்துள்ளது.

அஷ்டாங்க யோகம்

பதஞ்சலி யோகம் என்றும் அஷ்டாங்க யோகம் என்றும் அழைக்கப்படும் யோக முறைகள் பதஞ்சலி என்ற முனிவரால் உருவாக்கப்பட்டவை. பழங்காலத்தில் பதஞ்சலி முனிவரின் தரிசனமாக (மதமாக) இவை கடைபிடிக்கப் பட்டிருக்கலாம். இந்த அஷ்டாங்க யோகம் என்பது எட்டு அங்கங்களை கொண்டது. அவற்றைப் பற்றி சிறு குறிப்பினை இப்பதிவில் காண்போம்.
இயமம்அஷ்டாங்க யோகத்தில் முதலாவது யமம் - அஹிம்சை, சத்தியம், திருடாமல் பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருத்தல், ப்ரம்மசர்யம், போகப்பொருள்களை தவிர்த்த நிலை ஆகியவை கொண்ட வாழ்வே "யமா" அல்லது யமம் எனப்படும்.
 நியமம்
தூய்மையாக இருத்தல், சுகம் துக்கம், பிடித்தது பிடிக்காதது என்று நேரும்போது அமைதியாய் நடுநிலையாய் இருத்தல், தவம், கற்றல், எல்லாவற்றையும் ஈஸ்வரனுக்கு அர்ப்பணித்து தன் கடமைகளை செய்தல் ஆகியவை நியமத்தில் அடங்கும்.
இதுவரை சொன்னவை வாழ்க்கைமுறை. இனி உள்ளத்துக்காக செய்யக்கூடிய த்யான முறையாவன,
ஆசனம்
அசைவின்றி சுகமான வகையில் கஷ்டப்படுத்திக்கொள்ளாமல் அமரவேண்டும்.
 ப்ராணாயாமம்ஆசனம் அமைந்தபிறகு, ப்ராணாயாமம் என்ற முறையில் சுவாசத்தை கட்டுப்படுத்துவது. சுவாசங்கள் பலவகைப்படும். அத்தகைய சுவாசங்களுக்கு கால அளவுகளும் உண்டு. முறையான வகையில் ப்ராணாயாமம் எப்படி செய்வது என்பது பற்றி வேறொரு பதிவில் பார்ப்போம்.

ப்ரத்யாஹாரம்புலன்களை அடக்குதல், மனதை பழக்கி ஒருநிலை கொண்டு அதிலேயே அடங்கிவிடும் நிலை ப்ரத்யாஹாரம் எனப்படும்.
தாரணா
ஒரு நேரத்தில் ஒரே பொருளில் மனதை லயிக்கவிடுவது, மற்ற எல்லா இடையூறுகளையும் விலக்கி ஏகாக்ர சிந்தை என்பதைப்போல் ஒன்றையே தொடர்ந்து சிந்தித்து மனதை நிலை நிறுத்தி வைத்தல் தாரணா எனப்படும்.
த்யானம்
தாரணா நிலையில் மனதை ஒருமைப்படுத்தி, பக்தியுடன் "தைலதாரை" என்ற எண்ணை கொட்டுவதைப்போல் இடைவிடாமல் தொடர்ந்து மனம் லயிப்பதே த்யானம் எனப்படும்.
சமாதி
இந்த அஷ்டாங்க யோகத்தின் கடைசி நிலை, சமாதி எனப்படும்.
எதை தாரணா மற்றும் த்யான நிலைகளில் மனதில் லயிக்க விடுகிறோமோ அதாகவே ஆகி இரண்டர கலந்து ஒன்றாகிவிடுதலே சமாதி எனப்படும் எட்டவது நிலையாகும். இதற்கு முந்தைய நிலைகளில் செய்பவர், செயல், அதன் விளைவு என்பது இருக்கிறது. ஆனால் சமாதி நிலையில் இவையெல்லாம் ஒன்றாக கலந்து விடுகின்றன.
(தத்வ விவேசனியை தழுவி எழுதப்பட்டது).

No comments:

Post a Comment