Friday, January 7, 2011

ஸ்ரீ சக்கரம்

ஸ்ரீ சக்கரம்

ஸ்ரீ சக்கரம், ஸ்ரீ ராஜரஜோஸ்வரி யந்திரம், ஸ்ரீ மஹாதிரிபுரசுந்தரி யந்திரம் மஹாமேரு என்பவை எல்லாம் ஒன்று தான்.
ஸ்ரீ சக்கரம் மஹாசக்தியின் யிருப்பிடத்தை விளக்கும் வரைபடம் போன்றது.
43 முக்கோணங்கள், 8, 16 என இரு தளங்களாய் தாமரை யிதழ்கள், 'திரிரேகா'
எனப்படும் மூன்று வட்டங்கள், 'பூபுரம்' எனும் மூன்று கோடுகளால் ஆன நான்கு
வாயில்கள் கொண்ட சுவர், யிவை அனைத்திற்கும் மத்தியில் 'பிந்து ஸ்தானம்'. இதில்
முக்கோணங்கள், தாமரையிதழ்கள், திரிரோகா, பூபுரம் என அனைத்திலும் நோய்தீர்க்கும், ஆனந்தமளிக்கும், செல்வம் தரும், காவல் புரியும் யோகினிகள் பலர் அமர்ந்திருப்பதாக ஐதிகம். 'பிந்து ஸ்தானம்', பராசக்தியின் யிருப்பிடம்.
எனவே, ஸ்ரீ சக்கரத்தைப் பூஜிப்பது அனைத்து நலன்களையும் அளித்து வளம்
சேர்க்கும். மேலும் வைத்திருக்கும் மிடத்தில் சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும்.

No comments:

Post a Comment