Tuesday, January 11, 2011

நவராத்திரி விரதம்

புரட்டாசி மாதப் பிரதமை முதல் நவமியீராகவரும் ஒன்பது தினங்கள் நவராத்திரி விரத காலமாகும்.
அதில் முக்குணங்களுக்கும் மூலமான சர்வ லோக நாயகியை ஒன்பது நாள்களும் பூஜிக்கும்போது, முதல் மூன்று நாள்கள் தமோ குண சஞ்சாரியான ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியை வீரத்தையும், தைரியத்தையும் (ஒருநாளும் தளர்வு அறியா மனம்) வேண்டியும், அடுத்த மூன்று நாள்கள் ராஜோ குண சொரூபியான ஸ்ரீ மகாலட்சுமியை சகல செல்வங்களையும் (தனம்) வேண்டியும், கடைசி மூன்று நாள்கள் சாத்வீகக் குண சொரூபியான ஸ்ரீ சரஸ்வதியை கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் (ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்) என்பவற்றை வேண்டியும் வணங்குகின்றோம்.
அலைமகள், மலைமகள், கலைமகள் (துர்க்கை, இலட்சுமி, சரஸ்வதி) இம் மூவருமே நவராத்திரி விழாவின் நாயகியராவர். மலைமகள் சிவபெருமானின் சக்தியாகவும், அலைமகள் ஸ்ரீமத் நாராயணனின் மனைவியாகவும், கலைமகள் பிரம்ம தேவனின் சக்தியாகவும் போற்றப்படுபவகள். சிவனுக்கு ஒரு ராத்திரி அதுவே சிவராத்திரி. அன்னை சக்திக்கோ ஒன்பது இரவுகள் அதுவே நவராத்திரி.
இந்த ஒன்பது இரவுகளையும் மூன்றாகப் பிரித்து முதல் மூன்று இரவுகளிலும் துர்க்கா தேவியையும், நடு மூன்று இரவுகளிலும் இலக்குமி தேவியையும், இறுதி மூன்று இரவுகளிலும் சரஸ்வதி தேவியையும் வழிபடுவது இந்துக்களது மரபாகும்
துர்க்காதேவி வீரத்தின் தலைவி. இவள் நல்லோருக்கு இடர் விளைவிக்கும் துட்டர்களைச் சம்ஹாரம் செய்பவள், இவளை மெய்யன்போடு வழிபட்டு வீரம் பெற்று வெற்றிக் கொடியேற்றிய தமிழ் மன்னர்கள் வரலாறுகள் உண்டு.
இலக்குமி பொன்னரசி. செல்வத்திற்கு அதிபதி. தம்மை மெய்யன்போடு வழிபடு வோருக்கு செல்வத்தை அருளிச் செய்பவள். பொன்னிறமேனியள், செந்தாமரையை ஆசனமாகக் கொண்டவள்.
சரஸ்வதி; கலைவாணி என சகல கலைகளுக்கும் அதிபதி எண்ணும் எழுத்தும் தருபவள். கலைத்தேவி, பாரதி என்றும் அழைக்கப்படுவதோடு வீணையைக் கரங்களில் தரித்தவள். வெள்ளைப்பட்டு உடுத்தி வெண்டாமரைப் பூவில் அமர்ந்திருப்பவள். இவளது இன்னருள் பெற்ற கவியரசர்கள், புவியரசர்களோடு சரியாசனத்தில் இருந்தமை வரலாறு.
விஜயதசமிக்கு முதல்(ஒன்பதாம் நாள்) நாள் ஆயுத பூசை இடம்பெறும். அன்று இரவு நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களைத் தேவி பாதத்தில் சமர்ப்பித்துப் பூசை செய்து ஆசி பெற்று அடுத்தநாட் காலை அதனை உபயோகத்திற்கு எடுத்துக்கொள்ளுதல் மரபாகும்.
மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் தங்கள் புத்தகங்கள், எழுதுகோல்கள், கோவைகள் முதலியவற்றையும் தொழிலாளர்கள் தமது தொழிற் கருவிகளையும் கலைஞர்கள் தங்கள் இசைக் கருவிகளையும் தேவியின் பாதத்தில் சமர்ப்பித்து வழிபாடு செய்தல் மரபு. இவற்றைச் செய்ய வேண்டியது அவசியமுமாகும்.
விஜயதசமியின் அடுத்த சிறப்பு அன்றைய தினம் சிறுவர், சிறுமியர்களுக்கு ஏடு தொடக்குதல் ஆகும். இதனை வித்தியாரம்பம் என்போம். புதிய கடைகள், ஸ்தாபனங்கள் ஆகியவற்றை ஆரம்பிப்பதற்கும் இந்நாள் மிகப்பொருத்தமான பொன்னாள் ஆகும். இந்த வகையில் மலைமகள், அலைமகள், கலைமகள் ஆகிய தேவியரே நவராத்திரி நாயகியர் ஆவர். இத் தேவியரை நவராத்திரி காலத்தில் மனமாரத் தியானித்து நாவாரப்பாடி, உளமாரப் போற்றி வழிபட்டு முறையே வீரத்தையும், செல்வத்தையும், கல்வியையும் பெற்று உய்வோமாக.
மகிஷாசுரன் என்ற அசுரனின் செயல்களால் உலகம் நிம்மதியிழந்து தவித்த போது அன்னை துர்க்கை தோன்றி அக்கொடிய அசுரனை அழித்து உலகிலே நிம்மதியை நிலை நாட்டிய நாளாக விஜயதசமி நன்னாள் விளங்குகின்றது. இந்த விஜயதசமி தினத்திலே அதர்மத்தின் சின்னமாக விளங்கிய மகிஷாசுரனை அழித்தமையால் அன்னை மகிஷாசுர மர்தனி என்ற பெயருக்கும் உரியவளாகின்றாள்.
இந்நிகழ்வை நினைவூட்டுவதற்காகவும், அதர்மம் தலைவிரித்தாடும் போது துர்க்கா தேவியாகிய பராசக்தி தோன்றி அதனை அழித்து விடுவாள் என்பதை உணர்த்துவதற்காகவும் விஜயதசமியன்று ஆலயங்களில் மானம்பூ என்ற நிகழ்வு நடைபெறுகின்றது.
இதனை வாழை வெட்டு என்றும் கூறுவர். மகிஷாசுரன் துர்க்காதேவியின் அகோர கோபத்தைத் தாங்க முடியாது வன்னி மரத்திலே மறைந்த போதும் அம்மன் அவனைத் தேடிச்சென்று வதம்

No comments:

Post a Comment