Thursday, January 6, 2011

அஸ்வமேத யாகம் என்பது

அஸ்வமேத யாகம் என்பது


நானறிந்த வரையில் பலம் மிக்க ஒரு அரசன் தான் பலம் மிக்கவன் என்பதை அடுத்த நாட்டின் அரசனுக்குத் தெரிவிக்கும் முகமாகத் தன் பட்டத்துக் குதிரையை கட்டவிழ்த்து அடுத்த நாடுகளைச் சுற்றிவரச் செய்வான்.
பட்டத்துக் குதிரையை நிறுத்தி வைக்கும் நாடு அரசனின் பலத்தை ஒப்புக்கொள்ளவில்லை என்பதாகும். இந்தச் சவாலை பட்டத்துக் குதிரையை அனுப்பிய அரசன் போர் நடத்திச் சந்திப்பான்.

அஸ்வமேத யாகம் என்பது ஒரு அரசனின் தேசம் விஸ்தரிப்புக்கு அவனால் பக்கத்து தேசங்களுக்கு விடப்படும் ஷத்திரிய அறைகூவல்.

இதற்காகத்தான் அஸ்வமேதம், அதாவது அடுத்தவரின் ராஜ்யத்தையெல்லாம் வென்று நமது ராஜ்யத்தை ஒருங்கிணைக்க வேண்டும். அனைத்து நற்பலன்களையும் அடைய அனைத்து பாவங்களையும் நீக்க வேண்டும், இதற்காகத்தான் அஸ்வமேத யாகம்,

ராஜா ஒரு ஆண் குதிரையை அவிழ்த்துவிட்டு அடித்து விடுவார்கள் அக் குதிரை எங்கெங்கு செல்கிறதோ அதன் பின்னாலேயே இந்த ராஜாவின் காலாட்படை ஆயுதங்களோடு திரண்டு பின் தொடரும்.....



குதிரை சென்று நிற்கும் இடம் வரை அந்த ராஜாவின் ஆளுகைக்கு உட்பட்ட இடமாக அறிவிக்கப்படும் , எதிர்த்து எவனாவது வந்தால் போர் இல்லையெனில் வெற்றி அறிவிப்பு. பின் அக்குதிரையை மையமாக வைத்தே அஸ்வமேத யாகம், வீரம் கலந்த இந்த யாகத்தில் ஒரு விரசத்தையும் வைத்திருக்கிறார்களே... நூறு முறை எதிர்க்கும் வீரர்களையெல்லாம் தோற்கடித்து அவர்களிடம் திறைப்பொருள் வாங்கி நூறு அஸ்வமேதயாகங்களைக் குறையின்றி நிறைவு செய்யும் வீரனை யாகபலன் இந்திர பதவியில் இருத்தும் என சாஸ்திரங்கள் கூறியுள்ளன. அஸ்வமேதயாகம் செய்பவர் தன் வீர பராக்கிரமங்களை ஒரு பட்டயத்தில் எழுதி யாகக்குதிரையின் கழுத்தில் தொங்க விட்டு இக்குதிரையைப் பிடித்துக் கட்டிச் சமராட விருப்பமுள்ளவர் குதிரையைப் பிடித்துக் கட்டலாம் என்று சவாலான வாக்கியங்கள் பட்டயத்தில் எழுதப்பட்டிருக்கும் இப்படியான வீரவசனங்கள் கொண்ட பட்டயத்தினைக் கழுத்தில் கட்டிக்கொண்டு தன் விருப்பத்துக்கு செல்லும் யாகக் குதிரையை யாராவது பிடித்துக் கட்டினால் அவருக்கும் குதிரையுடன் வரும் சைன்யத்துக்கும் பெரும் போர் மூளும். அவரைத் தோற்கடித்து திறைப் பொருள் பெற்றே யாகக்குதிரையும் சைனியமும் மேலே செல்லும்.

No comments:

Post a Comment