Friday, January 7, 2011

முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்?

முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்?

அகஸ்திய முனிவரின் சீடர்களில் ஒருவரான இடும்பனை அழைத்து , தனது வழிபாட்டிற்காக கயிலை சென்று அங்கு முருகனுக்கான கந்த மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனும் இரு சிகரங்களையும் கொண்டு வரும்படி கூறினார்.
அகஸ்தியரின் கட்டளைக்கிணங்க இடும்பனும் கயிலை சென்று இவ்விரு மலைகளையும் இருபுறமும் தொங்க, காவடியாகக் கட்டி எடுத்துக் கொண்டு வந்தான். முருகன் இவ்விரு கிரிகளையும் திருவாவினன்குடியில் நிலைபெறச் செய்யவும், இடும்பனுக்கு அருளவும் விரும்பி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார்.
இடும்பன் வழி தெரியாமல் திகைத்த போது, முருகன் குதிரை மேல் செல்லும் அரசனைப் போல் தோன்றி இடும்பனை ஆவினன் குடிக்கு அழைத்து வந்து சற்று ஓய்வெடுத்துச் செல்லும்படி கூறுகிறார்.
இடும்பனும் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்து விட்டுப் புறப்படும் போது காவடியைத் தூக்க முடியாமல் திண்டாடினான். ஏன் இப்படி காவடியைத் தூக்க முடியாமல் போனது என்று சுற்றிப் பார்க்கும் போது சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவணாண்டியாய் கையில் தண்டுடன் நிற்பதைக் கண்டான். இடும்பனும் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான்.
ஆனால் அந்த சிறுவன் இந்த மலை 'தனக்கே சொந்தம்' என்று உரிமை கொண்டாட, கோபமுற்ற இடும்பன் அச்சிறுவனைத் தாக்க முயன்றான். அப்போது இடும்பன் வேரற்ற மரம் போல் கீழே சரிந்து விழுந்தான்.
இதைக் கண்ட அகஸ்தியர் மற்றும் இடும்பன் மனைவியுடன் சென்று வேண்ட, முருகன் இடும்பனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனைத் தனது காவல் தெய்வமாகவும் நியமித்தார். அப்போது முருகன், இடும்பன் போல் காவடியேந்தி சந்தனம், பால், மலர் போன்ற அபிஷேகப் பொருட்களை தன் சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கு அருள் பாலிப்பதாக வாக்களித்தார்.
அப்போது முதல் முருகனுக்கு இந்த காவடி எடுக்கும் பழக்கம் வழக்கமாகி விட்டது என்று ஆன்மீக வாதிகள் சொல்கிறார்கள்.
எது எப்படியோ? ஒவ்வொரு மனிதனுக்கும் இன்பமும் துன்பமும் இரண்டு சுமைகளாக சரி சமமாக இருக்கிறது. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இந்த இரண்டு சுமைகளையும் தாங்கித்தான் ஆக வேண்டும். இதற்கு கடவுள் பக்தி எனும் ஆன்மீக எண்ணம் இந்த இரண்டு சுமைகளையும் எளிமையாகச் சுமக்க உதவும் மையக் கோலாக உள்ளது என்பது மட்டும் உண்மை
முருகனின் சிறப்பு நாட்களில் காவடிகளை எடுப்பதைப் பார்த்திருப்பீர்கள். பால் காவடி, பன்னீர் காவடி, வேல் காவடி என்று பல வகைக் காவடிகளைப் பார்த்திருப்பீர்கள் இந்தக் காவடியைப் பற்றிய ஒரு புராணக் கதையைப் பார்ப்போமா?
ஒரு சமயம் அகஸ்திய முனிவர் சிவகிரி, சக்தி கிரி என்ற இரு மலைகளைத் தன் இருப்பிடத்திற்கு எடுத்துச் செல்ல ஆசைப்பட்டு அதற்காக இடும்பன் என்ற அசுரனை நியமித்தார். இடும்பன் ஒருவன் தான் சூரபத்மன் வழியில் வந்தவர்களில் எஞ்சிநின்றான். சூரபத்மனும், சுராசுரனும் ஸ்ரீமுருகப் பெருமானால் அழிக்கப்பட்டனர். இடும்பன் எல்லோருடைய தவறுக்கும் வருந்தி மன்னிப்புக் கேட்டான், அன்றையத் தினத்திலிருந்து முருக பக்தன் ஆனான்.
அந்த இடும்பன் அகஸ்திய மகா முனிவரின் வேலையை, அதாவது இரு மலைகளையும் தூக்கிப் போகும் வேலையை ஒப்புக்கொண்டான். இரண்டு மலைகளையும் இரு பக்கமும் ஒரு தராசு போல் கட்டிக்கொண்டு தன் தோளில் சுமந்து ஸ்ரீ முருகனையே நினத்துக்கொண்டு பழனி வந்தான். சற்று இளைப்பாறலாம் என்று தன் சுமையை இறக்கி வைத்தான். பின் கொஞ்ச நேரம் கழித்து அதைத் தூக்க முயன்றான், முடியவில்லை. பல தடவைகள் முயன்றும் அசைக்க முடியவில்லை. என்ன செய்வது என்று யோசித்துக் கந்தனை நினைக்க, ஒரு சிறுவன் கோமணத்துடன் தோன்றினான். தனக்கு மேலே ஏறிப் போக வேண்டும் அதனால் இந்த மலைகளை நகற்றச் சொன்னான். இடும்பனால் நகற்ற முடியவில்லை. பின் சிறு சண்டை ஆரம்பித்து, பெரிய சண்டையில் இடும்பனை அந்தச் சிறுவன் அடிக்க இடும்பன் இறந்தான். உடனே அந்தச் சிறுவன் முருகனாகக் காட்சி அளித்து இடும்பனைப் பிழைக்க வைத்தார். இடும்பனுக்கு வந்தது முருகப் பெருமானே என்று தெரிந்து வணங்கினான். அப்போது அவன் ஸ்ரீமுருகனிடம் கேட்டுக் கொண்டான், “யார் இதைப் போல் தோளில் காவடி போல் சுமந்து வருகிறார்களோ அவர்களுக்கு அருள் புரிய வேண்டும் .” என்று. அவர் குடி கொண்டிருக்கும் கோவில் வாசலில் என் சிலை இருக்க வேண்டும், வரும் பகதர்கள் என் சிலையை வணங்கிவிட்டுத்தான் உள்ளே போகவேண்டும் என்று வேண்டிக்கொண்டான். ஸ்ரீ முருகனும் அங்கனமே அருளினார். அதனால் தான் இடும்பன் முருகன் கோவிலில் முதலிலேயே காட்சி அளிப்பார்.

இப்போது காவடிகளைப் பார்ப்போம். காவடி என்பது இரு குடங்களில் பாலோ அல்லது தேனோ, இள்நீரோ நிரப்பி, அதை ஒரு கம்பில் இரு பக்கங்களும் தொங்க விட்டு. தோளில் தூக்குவது, பல வேல்களைப் பூக்களுடன் அமைத்து ஒரு பெரிய வில் போல் கம்பை வளைத்து, அதன் கீழே தூக்குவதற்கேற்ப ஒரு நீண்ட சட்டம் கொடுத்துத் தோளில் சுமப்பது போன்றவைகள் ஆகும். இதைத் தவிர சிலர் அலகு என்றுச் சொல்லப்படும் ஒரு நீண்ட ஊசியை ஒரு கன்னம் வழியாகக் குத்திக் கொண்டு மறு கன்னம் வழியாக வரவழைத்துப் பிரார்த்தனைச் செலுத்துவார்கள்.சிலர் 108 வேல்களை உடலில் குத்திக்கொண்டு முருகப் பெருமானிடம் மனதார ஒன்றி விடுவார்கள். சிலர் அக்னி மூட்டி அதன் மேல் நடப்பார்கள். அதற்குத் தீ மிதித்தல் என்று பெயர். மனம் முருகனிடம் ஒன்றி விடுவதால் வலி தெரிவதில்லை, இரத்தம் வருவதில்லை. விழா முடிந்தவுடன் அந்த இடத்தின் மேல் விபூதி பூச வடுக்களும் இருப்பதில்லை. இவை எல்லாம் முழு நம்பிக்கையின் ஆதாரத்தில் தான் நடக்கின்றன. நம் நாட்டில் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் இந்தக் காவடிகள் எடுக்கப்படுகின்றன.

எது எப்படியோ? ஒவ்வொரு மனிதனுக்கும் இன்பமும் துன்பமும் இரண்டு சுமைகளாக சரி சமமாக இருக்கிறது. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இந்த இரண்டு சுமைகளையும் தாங்கித்தான் ஆக வேண்டும். இதற்கு கடவுள் பக்தி எனும் ஆன்மீக எண்ணம் இந்த இரண்டு சுமைகளையும் எளிமையாகச் சுமக்க உதவும் மையக் கோலாக உள்ளது என்பது மட்டும் உண்மை.

No comments:

Post a Comment