Friday, January 7, 2011

வள்ளலாரின் நித்திய கரும விதிகள்

வள்ளலாரின் நித்திய கரும விதிகள்

வைகறை துயிலெழு.
பல்துலக்கி ½ லிட்டர் நன்னீர் அருந்துக.

அமுதக்காற்று வீசும் பூஞ்சோலையில் நடை பயில்க.

காலைக் கடன்களை முடிக்கவும்.

கரிசலாங்கண்ணி இலை 10 முதல் 15 ஐ நீரில் கழுவி உண்க.

பசித்த பின் புசிக்கவும்.
காலையில் மூலிகைப்பால், மதியம் அரைவயிறு உணவு, இரவு எளிய உணவு உண்க.
மதிய உணவிற்குப்பின் சற்று படுத்து ஓய்வு எடுக்கலாம்.
இரவு உணவு உண்டபின் மூன்று மணி நேரம் கழித்து 3 மணி நேரம் உறங்கலாம்.
உணவில் உப்பு, புளி. மிளகாய், மூன்றையும் குறைத்து, அதற்குப் பதிலாக மிளகு, சீரகம் சேர்க்கலாம்.
கீரை வகைகளை உணவில் சேர்க்கவும்.

கிழங்கு வகைகளில் கருணைக்கிழங்கு தவிர மற்றதை தவிர்க்கவும்.

காலை, மதியம், மாலை, இரவு உறங்கு முன்னரும் 5 முதல் 6 தடவை தியானம் செய்வது நல்லது.
தூங்கும் பொழுது இடது பக்கம் சாய்ந்து தூங்குதல் நல்லது.
ஆகாரம் அரை (உணவு ½ வயிறு. நன்னீர் ¼ வயிறு). நித்திரை அரைக்கால் (3 மணி நேரம்), மைதுனம் (உடல் உறவு) 16 நாட்களுக்கு ஒருமுறை. பயம் பூஜ்யம்-இவை வள்ளலாரின் வாழ்வியல் நெறிகள்.

மரக்கறி உணவே பொருந்தும் உணவு. இது உடலை வலுவாக்கும். அறிவை விளக்கும். உணர்வை பண்படுத்தும். புத்தியை கூர்மையாக்கும். வாழ்நாளை நீட்டிக்கும். சைவ உணவே சாலச் சிறந்தது.

ஒழுக்கம், உயிர் இரக்கம், இன்சொல், பயனில தவிர்த்தல், சினம் தவிர்த்தல், தெய்வம் பராவல், பெருங்குணம் பற்றல் – இவை மன அமைதியையும், மன நிறைவையும் தரும்.

No comments:

Post a Comment