Sunday, January 16, 2011

கோமாதா !

கோமாதா !

முழுமுதல் தெய்வங்கள் என பிரம்மா , விஷ்ணு , ருத்திரன் , மகேஸ்வரன் , சதாசிவன் ஆகியவர்களைச் சொல்வார்கள் . அதனை அடுத்து அமைபவர்கள் தேவர்கள் முப்பத்து மூன்று கோடி என்றும் சொல்வார்கள் . இந்த எல்லா தெய்வங்களும் பசுவில் இடம்பிடித்திருக்கின்றன என்று புராணங்கள் சொல்கின்றன .

பசுவின் உடலில் வலது கண்ணில் சூரியன், இடது கண்ணில் சந்திரன், இரண்டு கண்களுக்கும் இடையில் ( நடுவில் ) சிவபெருமான், மூக்கின் வலது பக்கம் முருகன், இடது பக்கம் விநாயகர், மண்டையில் தீர்த்தராஜன், வலது கொம்பில் எமன், இடது கொம்பில் இந்திரன், நெஞ்சில் மகாவிஷ்ணு, இடது முன் கழுத்தில் சரஸ்வதி, கீழ் பக்கம் ராகு, மேல் பக்கம் கேது, முன் கால் நடு முண்டுக்கு மேல் செவ்வாய், அதன் கீழ் சனி, அதன் மேல் சுக்கிரன், புதன், கொண்டையில் பிரம்மா, கொண்டையின் கீழ்ப்பக்கம் குரு, முன்பக்க வலது காலில் பைரவர், இடது காலில் அனுமன், நடு முதுகில் அக்னி, பின்பக்கம் முதுகில் வருணன், குபேரன், வாலின் கீழ் லட்சுமி, அதன்கீழ் கங்கை, வாலில் நாகராஜன் வாசம் செய்கிறார்கள் என்கிறது பக்தவிலாசம் என்னும் நூல் .

No comments:

Post a Comment