Thursday, January 6, 2011

அட்சய திருதியையும் அன்னதானமும்!

அட்சய திருதியையும் அன்னதானமும்!
அட்சய திருதியை! சித்திரை மாதம், வளர்பிறை திருதியையில் வரும் இந்த நாளில்தான் உலகைப் படைத்தான் பிரம்மன். கண்ணனின் அருளால் குசேலன், குபேரன் ஆனதும், சூரியதேவனின் அருளால் பாஞ்சாலிக்கு அட்சய பாத்திரம் கிடைத்ததும் இந்த நாளில்தான்!
'அட்சயம்' என்றால் அழியாதது; அள்ள அள்ளக் குறையாதது என்று பொருள். இந்த நாளில் செய்யும் புண்ணிய காரியங்க ளுக்கான பலன்கள் மென்மேலும் பெருகுமாம்

முதலில் 'அக்ஷய திரிதியை' என்றால் என்னவென்று பார்ப்போமே. 'அக்ஷய' என்றால் எடுக்க எடுக்கக் குறையாதது என்றொரு பொருளுண்டு. அக்ஷய பாத்திரம் தமிழிலக்கியங்களிலும் உண்டு.
மணிமேகலைக்கு பசிப்பிணி போக்கும் 'அட்சய பாத்திரம்' கிடைத்தது. அன்று முதல் மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்கு பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள்.
'திரிதியை' என்பது அமாவாசை அல்லது பௌர்ணமியிலிருந்து மூன்று நாள் கழித்து வரும் நாள். 'அக்ஷய திரிதியை' எனபது சித்திரை மாதம் அமாவாசை முடிந்த வளர்பிறையின் மூன்றாம் நாள்.
வளர்பிறைக்கே ஒரு சிறப்புண்டு. இருளாய் இருந்த வானத்தில் நிலா ஒவ்வொறு நாளும் வளர்ந்து முழு நிலவாய் மாறுவதே ஒரு அழகுதான்.
இதை வைத்துப் பார்க்கையில் அக்ஷய திரிதியை அன்று செய்யும் காரியங்கள் வளர்பிறை போல வளரும்; அட்சய பாத்திரம் போல குறைவின்றி இருக்கும் என்று பொருளாகிறது. ஆனால் இது தங்கம் வாங்கத் தோற்றுவிக்கப்பட்டதல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அக்ஷய திரிதியை ஏழை எளியோருக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டதே. அன்றைய தினம், பசித்தோர்க்கு உணவு படைத்தால் ஆயுள் அதிகரிக்கும். இயலாதோர்க்கு உடை கொடுத்தால் பதவி உயர்வு வரும் என்றெல்லாம் புராணங்களில் சொல்லியுருக்கிறது. தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பது பின்னால் வந்த நம்பிக்கையாக இருக்கலாம்.

No comments:

Post a Comment