Thursday, January 6, 2011

துளசி மஹிமை

துளசி மஹிமை
1. நாரத மகாரிசி ப்ருது மஹாராஜாவுக்குச் சொல்கிறார்:-
சகல தேவதைகளும் தங்களுக்கு ஒரு காரியம் சித்திக்க வேண்டி பராசக்தியை போற்றுகிறார்கள். அப்போது ஆகாயத்தில் உலகெங்கும் பிரகாசிக்கும் தேஜோ மண்டலத்தைக் கண்டார்கள். அங்கே தோன்றிய ஆகாச வாணியையும் செவியுற்றனர்.
2. தேவதைகளால் பிரார்த்திக்கப்பட்ட சக்தியானவள், ''ஸத்வம், ரஜஸ், தமஸ் என்கிற மூன்று வித குணங்களால் நான்தான் கௌரீ, லக்ஷ்மி, சரஸ்வதி என்கிற மூன்று வித பேதத்தை அடைந்திருக்கிறேன். தேவர்களே!அங்கே செல்லுங்கள். உங்களுக்குக் காரிய சித்தி உண்டாகும் என்று ஆக்ஞை இட்டாள்.
3. அதற்குப் பிறகு சகல தேவர்களும் பராசக்தியின் வாக்கியப் படி மிகவும் பக்தியுடன் கௌரீ முதலான மூன்று பேர்களையும் வந்தனம் செய்தார்கள்.
4. கௌரீ முதலானவர்கள் தேவதைகளிடம்; சில விதைகளைக் கொடுத்து, 'இந்த விதைகளை ஸ்ரீ விஷ்ணு இருக்கும் இடத்தில் விதைத்தால் உங்கள் காரியம் சித்திக்கும்' என்று சொன்னார்கள். தேவர்களும் அப்படியே விதைத்தார்கள்.
5. ஸ்ரீ பார்வதி தேவியின் அம்சமாக ஸத்வம், ரஜஸ், தமஸ் என்கிற மூன்று குணங்களோடும் கூடிய துளசி அங்கே உண்டாயிற்று. அதைப் பார்த்து விஷ்ணு மிகவும் சந்தோஷத்துடன் அதை எடுத்துக்கொன்டு வைகுண்டம் சென்றார். விஷ்ணுவுக்குத் துளசியிடம் அதிகமான ப்ரீதி உண்டு. துளசியின் அடியில் ஸ்ரீவிஷ்ணுவைப் பூஜித்தால் விசேஷமான பலன்கள் உண்டாகும்.
6. எந்தக் இடத்தில் துளசி வனம் இருக்கின்றதோ, அந்த அரசனே! மிகவும் பரிசுத்தமானவர் அந்தக் கிருகத்தில் யம தூதர்கள் வரமாட்டார்கள்..
7. சகல பாபங்களையும் போக்கும்; சகல இஷ்டங்களையும் அளிக்கும்.. துளசி வனத்தை யார் உண்டுபண்ணுகிறார்களோ அவர்கள் யமனை அடைய மாட்டார்கள்.
8. நர்மதா நதியின் தரிசனம்;கங்கை ஸ்நானம் துளசி வனத்தின் சம்பந்தம் இம்மூன்றும் சமமான பலனைக் கொடுக்கும்.
9. துளசியை வளர்த்து, காப்பாற்றி, தரிசிப்பதால் வாக்கு, மனம், சரீரம் மூன்றினாலும் செய்த பாபங்கள் போகும்.
10.துளசியால் ஸ்ரீமகாவிஷ்ணுவையோ, பரமேசுவரனையோ பூஜிக்கிறவன் முக்தியையடைகிறான். மறுபடியும் பிறவியை அடையமாட்டான்.
11. புஷ்கரம் கங்கை முதலான புண்ய தீர்த்தங்கள், விஷ்ணு முதலான தேவதைகள் எல்லோரும் துளசி தளத்தில் எப்பொழுதும் வசிக்கிறார்கள்.
12. துளசியைச் சிரசில் தரித்துக்கொண்டு பிராணனை விடுபவன் அநேக பாபங்கள் செய்திருந்தாலும் வைகுண்டத்தை அடைகிறான்.
13. துளசிக் கட்டையால் அரைத்த சந்தனத்தை, எவன் தரிக்கிறானோ, அவன் பாபம் செய்ய மாட்டான்

No comments:

Post a Comment