Tuesday, February 8, 2011

கோயிலில் அர்ச்சகருக்கு பணம் கொடுப்பது அவசியமா?

கோயிலில் அர்ச்சகருக்கு பணம் கொடுப்பது அவசியமா?

அர்ச்சகருக்கு பணம் தரும் விடயத்தை, கோயிலுக்கு வரும் பக்தர்களுடைய மகிழ்ச்சியின் வெளிப்பாடாகப் பார்க்க வேண்டும்.
 மந்திரங்களை உச்சரிப்பதிலும் அந்த கோயில் அர்ச்சகர்/குருக்களின் தனித்துவம் வெளிப்படும்போது, நமது மனதில் ஒரு மகிழ்ச்சி ஏற்படும். சுவாமிகளை சிறப்பாக அலங்காரம் செய்தன் மூலமும் சில அர்ச்சகர்கள் பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவர்.
இவற்றையெல்லாம் செய்யும் குருக்களுக்கு மனமுவந்து காணிக்கை/பணம் கொடுப்பதில் தவறில்லை. ஆனால் கட்டாயப்படுத்தி காசு வாங்கும் இடத்தில் காணிக்கை அளிப்பதும், அளிக்காததும் அவரவர் மனநிலையைப் பொறுத்தது.

No comments:

Post a Comment