Sunday, February 13, 2011

இறைவனை வழிபட்டபின், கோவிலில் அமர்வது எதற்கு?

இறைவனை வழிபட்டபின், கோவிலில் அமர்வது எதற்கு?

பொதுவாகவே கோயிலுக்குச் செல்வது என்பது ஒரு நல்ல ஆன்ம, உடல் பயிற்சி. கோயிலையும், விக்ரகங்களையும் ஒருமனப்பட்டு வலம் வரும்போது, மனதில் இறையுணர்வு நிறைகிறது.
இது மனதிற்கு பலம். கைகளையும் கால்களையும் இயல்பாக வீசியபடி நிதானமாக நடந்து வரும்போது உடலுக்கும் பலம். இப்படி மனம், உடலுக்குப் பயிற்சி கொடுக்கும்போது, மனம் சோர்வடையாவிட்டாலும், சிலசமயம் உடல் சற்றே சோர்வடையும்.
அப்படிப்பட்ட உடலுக்கு சிறிது நேரம் ஓய்வு கொடுக்கும் வகையில் கோயிலுக்குள்ளேயே அமர்வது, பல்லாண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கம். இது வெறும் உடல் ஓய்வுக்கான நடைமுறை மட்டுமல்ல, மன அமைதிக்கான பயிற்சி என்றும் சொல்லலாம்.
கோயிலில் சில பேரை நீங்கள் கவனித்திருக்கலாம். யாருக்கும் எந்த இடையூறும் இன்றி, சற்று ஒதுங்கி அமர்ந்தபடி தியானத்தில் ஆழ்ந்திருப்பார்கள். இவர்கள் தம் மனதிற்கு பலம் கூட்டுகிறார்கள்.
கோயிலில் வலம் வந்தபிறகு அமர்வது என்பது வெறுமே ஓய்வெடுப்பதற்காக அல்ல. தாம் சுற்றி வந்த இறைவனை நினைத்து, கண்மூடி தியானத்தில் ஆழ்வதற்காகவும்தான். அதுவும் பிற யாருக்கும் எந்த அசௌகரியமும் தராதபடி தனித்து அவ்வாறு ஆழ்வதுதான் சிறப்பு



No comments:

Post a Comment