Saturday, February 26, 2011

சில குழந்தைகள் முன்னோர்களின் பிறப்பு என்று சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறோம்.

சில குழந்தைகள் முன்னோர்களின் பிறப்பு என்று சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறோம். மேலும் ஒத்த உருவத்தில் சிலர் பிறப்பதையும், அவர்களைப் போன்றே நடந்து கொள்வதையும் பார்க்கிறோம். இவர்களின் ஜாதகம், அவர்களின் ஜாதகத்தின் ஆதிக்கத்தில் இருக்குமா? இல்லை அவர்களுடைய ஜாதகத்தில் இவர்கள் பிறப்பார்களா?

 அறிவியல்பூர்வமாகச் சொல்லப்போனால் முன்னோர்களுடைய குரோமோசோம்ஸ், ஜீன்ஸ் காரணமாக இருப்பதைச் சொல்லலாம். மரபியல் கூறுகளின் அடிப்படையில் தொடர்கின்றன என்று சொல்லலாம்.
பொதுவாக லக்னத்தில் என்ன கிரகம் இருக்கிறதோ அது தோற்றத்தையும், நடவடிக்கைகளையும் நிர்ணயிக்கிறது. லக்னத்தில் சனி உட்கார்ந்திருந்தால் தாத்தா, பாட்டியைக் கொண்டுவரும். லக்னத்தில் புதன் இருந்தாலோ அல்லது பூர்வ புண்ணிய அதிபதி உட்கார்ந்திருந்தாலோ தாய்வழி உறவுகளில், தாய்மாமன் மாதிரி, அத்தை மாதிரி உறவுகளைக் கொண்டுவரும். அந்தக் குழந்தைகளுக்கு தாய்வழி உறவுகளுடைய ஜீன் அதிகமாக இருக்கும். முன்னோர்களைப் போல் இருந்தால், அது சனியினுடைய ஆதிக்கம் அதிகம் இருந்தால் கொண்டுவரும். அதாவது, தாத்தா, தாத்தாவினுடைய அப்பா, முப்பாட்டன்களைக் கொண்டுவருவது சனி. ஏனென்றால், அவர்தான் பழமைக்கும், மரபு சார்ந்த நடவடிக்கைகள், பண்பாடு சார்ந்த நடத்தைகள் போன்று பிறப்பதற்கு காரணம் சனிதான். இதையெல்லாம் நடைமுறையில் பார்க்கிறோம்.
ஒருவர் வந்திருந்தார். என்னுடைய அப்பா பிறந்த தேதி, நட்சத்திரத்திலேயே இவன் பிறந்திருக்கிறான். பார்ப்பதற்குக் கூட என்னுடைய அப்பா சாயலில்தான் இருக்கிறான். அந்தக் குழந்தைக்கு சந்திரன், சனி இரண்டும் ஒன்றாக உட்கார்ந்து கொண்டிருக்கிறது. இதுபோல சந்திரன், சனி சேர்க்கை இருந்தாலும் பாட்டன், பாட்டியைக் கொண்டுவரும். இதுபோல ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு அமைப்பிற்கு உரிய கிரகமாக இருக்கிறது.ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்:

No comments:

Post a Comment