Tuesday, February 8, 2011

சூரசம்ஹார தத்துவம்!

சூரசம்ஹார தத்துவம்!

யானைமுகன், சிங்கமுகன், சூரபத்மன் ஆகிய மூன்று அரக்கர்களை ஒழித்தார் முருகப் பெருமான். இம்மூன்று அரக்கர்களும் முறையே, மாயை, கன்மம், ஆணவம் ஆகியவற்றை உணர்த்துவர். மாயையை உணர்த்தும் யானைமுகனை முதலில் ஒழித்தார் முருகப் பெருமான். மாயை ஒழிந்தால், கன்மம் தொலையும். சிங்கமுகனை இரண்டாவதாக வதைத்தொழித்தார். மூன்றாவது, ஆணவ மலம் போன்றவன் சூரபத்மன். ஆணவ மலம் ஒடுங்குமே தவிர முற்றிலும் ஒழியாது. ஆகவே, அவனை மயிலாகவும், சேவலாகவும் ஒடுக்கி, பணி கொண்டார் முருகப்பெருமான். இத் தத்துவமே கந்தசஷ்டி விழாவில் தெளிவுபடுத்தப்படுகிறது.





No comments:

Post a Comment