Saturday, February 12, 2011

நல்லெண்ணெய்யே சிறந்தது!

நல்லெண்ணெய்யே சிறந்தது!

.தீபாவளிக்கு ஸ்நானம் செய்பவர்கள் நல்லெண்ணெய் தேய்த்து நீராடுவதுதான் சிறந்தது. பாற்கடலில் தோன்றிய மகாலட்சுமி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பெருமாளிடம் கூறினாள்; ஆனால், அவரோ, லட்சுமியிடம் விளையாட எண்ணி, "திருமணம் செய்யமாட்டேன்' என்று சொல்லி ஓரிடத்தில் ஒளிந்து கொண்டார். அவரைத் தேடிய மகாலட்சுமி, எள் செடிகள் நிறைந்திருந்த ஒரு தோட்டத்தினுள் புகுந்து சென்றாள். அப்பொழுது அவளது காலில் மிதிபட்ட எள் நசுங்கி, எண்ணெய்யாக வெளிப்பட்டு, காலில் ஒட்டி அவளுடன் கலந்தது. அந்த வேளையில் மகாவிஷ்ணுவை கண்டாள் மகாலட்சுமி. அவளை ஏற்றுக்கொண்டார் பெருமாள். இந்நிகழ்ச்சி நடந்தது ஒரு தீபாவளி நாளில்தான். எனவே, தீபாவளி நாளில் நல்லெண்ணெய்யும் பிரதான இடம் பிடித்து விட்டது. தீபாவளியன்று கங்கா ஸ்நானம் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதே சிறந்தது என்று ஆகிவிட்டது.

No comments:

Post a Comment