Monday, February 7, 2011

அன்னதான மகிமையை விளக்கும் கதை

கர்ணனைப் பற்றி பல கதைகள் கேட்டிருக்கலாம் - படித்திருக்கலாம் இதோ ஒன்று

அன்னதான மகிமையை விளக்கும் கதை
கர்ணன்வாழ்ந்த காலத்தில் தன்னுயிர் காக்கும் கவச குண்டலங்கள் உட்பட - தான் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் தானம் கொடுத்தவன். தானத்திற்கே பெயர் பெற்றவன்.தானம் என்றால் என்ன என்பதை உலகிற்குக் காட்டியவன். அவன் இறந்ததும்கண்ணனால் சுவர்க்கத்துக்கு அனுப்பப்பட்டவன்.
அங்கு சென்று சகலவசதிகளுடன் இருந்தும் அவனுக்கு ஏனோ பசி அடங்கவில்லை. எப்பொழுதும்வயிற்றுப்பசி இருந்து கொண்டே இருந்தது. அவனும் சாப்பிட்டுச் சாப்பிட்டு
அலுத்துப் போனான். பிறகு சுவர்க்கத்தின தலைவனிடம் சென்று கேட்டான். நான்எவ்வளவு தான தருமங்கள் செய்திருக்கிறேன் - எனக்கு ஏன் இக்கொடிய தண்டனை -எனக்கு ஏன் இப்படிப் பசிக்கிறது எனக் கேட்டான்.தலைவனோ - கர்ணா நீபூவுலகில் வாழ்ந்த காலத்தில் பொன்னும் பொருளும் மனியும் ஏன் உன்னுயிரும்தானமாகக் கொடுத்து பெரும் புகழ் பெற்றவன். ஆனால் சிந்தித்துச் சொல் -எப்போழுதாவது யாருக்காகவாது அன்ன தானம் செய்திருக்கிறாயா - எனக் கேட்டான்.கர்ணனுக்குஅன்ன தான செய்ததாக நினைவு இல்லை. அன்ன தானம் செய்யாததால் தான் இப்பொழுதுவயிற்றுப்பசி அடங்க வில்லை எனவும் கூறக் கேட்டான். அப்படியானால் இதற்குஎன்ன தான் வழி எனக் கேட்ட போது - தலைவன் கூறினான் - உனது வலது கை ஆள்காட்டி விரலை வாயில் வைத்துக் கொள் - பசி அடங்கி விடும் என்றான்.
கர்ணனுக்குஒன்றும் புரியவில்லை. விரலைச் சப்பினால் பசி அடங்குமா - என்ன இது எனஐயப்பாடு இருந்தாலும் - வேறு வழி இல்லை என வலது கை ஆள் காட்டி விரலைவாயில் வைத்து சப்ப - பசி உடனே அடங்கிற்று.ஒன்றும் புரியாத கர்ணன்- இது எப்படி மாய மந்திரம் எனக் கேட்க - தலைவன் கூறினான் - அன்பின் கர்ணா- நீ பூவுலகில் வாழும் போது உன்னிடம் ஒரு வறியவன் பசியுடன் வந்து எங்குஅன்னதானச் சத்திரம் இருக்கிறதென்று கேட்க - நீயும் உனது வலது கை ஆள்காட்டிவிரலால் இதோ இப்பக்கம் செல்க என வழி காட்டினாய். அந்த புண்ணியச் செயல் -நற்செயல் உனக்கு இப்பொழுது உதவுகிறது எனக் கூற -கர்ணனும் அன்ன தான மகிமையைஉணர்ந்தான்.பதிவர்களே - நாமும் பிறந்த நாள் - திருமண நாள் - என்றுகொண்டாடும் போதெல்லாம் - முதியோர் இல்லங்களில் வாழ்பவர்கள் - அனாதைஇல்லங்களில் வாழ்பவர்கள் - வறியோர் இவர்களுக்கெல்லாம் அன்ன தானம் செய்தால்அவர்கள் பெறும் மகிழ்ச்சியானது நமக்கும் மகிழ்ச்சியினையும்

புண்ணியத்தைனையும் தரும் .வாருங்கள் அன்ன தானம் செய்வோம்

எளிய தர்மம் செய்யுங்க!

தர்மம் தலைகாக்கும் என்பர். மிகப்பெரிய அளவில் தான் தர்மம் செய்ய வேண்டும் என்பதில்லை; எளிய முறையில் தர்மம் செய்தாலே போதும் என்பதை உணர்த்த, மதுரையில், மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று, மீனாட்சி-சுந்தரேஸ்வரர் படியருந்தருளிய லீலை என்ற பெயரில் நடக்கும் விழா மிகவும் சிறப்புமிக்கது.
பசி ஒரு கொடிய வியாதி. பாவிகளுக்கு கூட இது வந்துவிடக்கூடாது என்பதில் நம்மவர்கள் அக்கறையாக இருந்துள்ளனர். கேரளாவில் செருக்குன்னம் அன்னபூரணி கோவிலில் தினமும் அன்னதானம் நடக்கும். இரவானதும், ஒரு துணியில் அன்னத்தை வைத்து மரத்தில் கட்டி தொங்க விடுவர். இரவில், அந்தப் பக்கம் நடமாடும் பாவத்தொழில் செய்யும் திருடர்களுக்கு கூட, அந்தச் சோறு பசியாற்றட்டுமே என்பது இதற்கு காரணமாம்.
பெற்றவர்கள் சிரமப்பட்டு, பாடுபட்டு குழந்தைகளுக்கு உணவளிக்கின்றனர். அந்த உணவு தட்டுப்பாடின்றி கிடைக்க, சிறந்த நிலம், மழை, பிற வசதிகளெல்லாம் வேண்டும். எத்தனை அணைகள் இருந்து என்ன பயன்! மழை பெய்தால் தானே அது நிரம்பும்! அது யார் கையில் இருக்கிறது?
பரமேஸ்வரான தந்தையிடமும், பார்வதியான அன்னையிடமுமே இருக்கிறது. இவர்களின் அம்சமான சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் உலக மக்களுக்கு உணவளிப்பதற்காக ஆண்டில் ஒருநாள் பவனி வருகின்றனர். இதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த திதி அஷ்டமி. நாம் எந்த சுபநிகழ்ச்சியையும் அஷ்டமியில் நடத்துவதில்லை. நாம் எதை வேண்டாம் என்று ஒதுக்குகிறோமோ, அதை எடுத்துக் கொள்கிறான் ஆண்டவன். அதாவது, அவனுக்கு எந்த தேவையு மில்லை. அவன் தன்னிடமுள்ளதை, தன்னால் படைக்கப்பட்ட ஜீவன்களுக்கு கொடுப்பதையே விரும்புகிறான். இதற்காக, உலக மக்களைச் சந்திக்க வருகிறான்.
ஒருமுறை, செப்பு ஒன்றில் ஒரு எறும்பை அடைத்து வைத்தாள் அம்பாள். "இறைவா! எல்லாருக்கும் படியளப்பதாகச் சொல்கிறீர்களே... செப்புக்குள் கிடக்கும் இந்த எறும்பிற்கு எப்படி படியளக்கிறீர்கள், பார்க்கலாம்?' என்றாளாம். சற்றுநேரத்தில், செப்பைத் திறந்து பார்க்கச் சொன்னார் சுவாமி. அந்தச் செப்புக்குள் பாதி துண்டு அரிசி கிடந்தது. அதை அந்த எறும்பு எடுத்துச் செல்ல முயற்சி செய்து கொண்டிருந்ததாம்.
எல்லா ஜீவராசிகளுக்கும் ஏதோ ஒரு வழியில் படியளந்து விடுகிறார் இறைவன். மார்கழி அஷ்டமியன்று மீனாட்சியம்மன் கோவில் ஆடிவீதியில், மாவுக்கோலம் போடும் வழக்கம் இருக்கிறது. இதை நேர்ச்சையாகவே பலர் செய்கின்றனர். மிகுந்த வறுமையிலுள்ளவர்கள் இந்த நேர்த்திக்கடனை செய்வது வழக்கம். இந்த மாவை அங்குள்ள எறும்பு உள்ளிட்ட ஜீவராசிகள் உண்ணும். இந்த எளிய தர்மத்திற்கு மகிழும் இறைவன், அவர்களது பசியைப் போக்குவதாக ஐதீகம்.
மதுரையில் நடக்கும் விழாக்களில் சப்பர பவனி ஆடிவீதி, சித்திரை வீதி, மாசிவீதிகளில் நடப்பதே வழக்கம்; ஆனால், படியளக்கும் விழா சப்பரம் மட்டும், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வெளிவீதியில் உலா வரும். அதிகளவு மக்களுக்கும், குறிப்பாக, அடித்தட்டு மக்களுக்கும் உணவளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இவ்வாறு செய்கின்றனர். மார்கழி அஷ்டமியை தர்மத் திருநாளாகக் கொண்டு, நம்மால் முடிந்த உதவியைப் பிறருக்குச் செய்து இறையருள் பெறுவோம்.

No comments:

Post a Comment