Thursday, February 3, 2011

பூஜை அறை

பூஜை அறை
எத்தனையோ கஷ்டங்களை அனுப்பவித்து வரும் மனிதருக்கு, ஆறுதலும் மனது அமைதியும், நிம்மதியும் கிடைக்கும் ஒரே வழி கடவுளை வணங்குவதுதான். தனக்கு மீறிய ஒரு சக்தி இருக்கின்றது என்ற நம்பிக்கை, வாழ்க்கையில் ஏற்படும் எத்தனை தடைகளையும் மீறி முன்னேற்றத்தை அடைய மனிதனுக்கு தன்னம்பிக்கையை அளிக்கிறது.
கடவுள் என்ற சக்தி கண்டிப்பாக நம்மை காப்பாற்றும் என்று மனதில் தீவிரமான நம்பிக்கை வைத்தால் பெறிய கஷ்டம் கூட சிறியதாக தெரியும்.
உலகைப் படைத்து, அனைத்து ஜுவராசிகளையும் இயக்கி வைக்கும் பரமசக்தியுடைய கடவுள் எல்லா இடத்திலும் நீக்க மற நிறைந்து உள்ளார். பூஜை அறை ஒன்றை அமைத்து நாம் வணங்குவது நமது மன அமைதிக்கும் நம்பிக்¨க்கும் மட்டுமே. பூஜை அறை அமைப்பதற்கு வடகிழக்கு, வடமேற்கு மூலைகள் மிகவும் உகந்தவை. கிழக்கு, வடக்கு மேற்கு திசைகளிலும் அமைக்கலாம்.
வடகிழக்கு மூலையில் அமைக்கப்படும் பூஜை அறை, இய்றகை சக்திகளுடன். இறை சக்தியையும் வீட்டிற்குள் பரப்பி நல்ல பலன்களைத் தருகிறது. பூஜை அறையை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது அனைவா¢ன் வழக்கமாதலால், வடகிழக்கு மூலை சுத்தமாக இருப்பது நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். பூஜை அறையில் வேறு பொருள்களை வைக்காமல் இருப்பதால், வடகிழக்கு மூலை சுமையற்றதாகி, பெரும் நன்மைகளை கொடுக்கிறது.
ஈஸ்வரன் ஒவ்வொரு வீட்டிலும் வடகிழக்கு மூலையில் வாசம் செய்வதாக நம் சாஸ்திரங்கள் கூறுவதால் பூஜை அறை இங்கு அமைவது மிகவும் பொறுத்தமாகும். ஈஸ்வரனின் இருப்பிடமாக கருதப்படும் "கைலாயம்" இந்தியாவின் வடகிழக்கு ஈசானிய மூலையில் அமைந்துள்ளது இதன் சிறப்பை தெளிவாக்குகிறது.
வடமேற்கு மூலை தியானத்திற்கு சிறந்தது. இந்த மூலையில் பூஜை அறை அமைப்பதால் நல்ல ஆழ்நிலை தியானமும், சிறப்பான மன அமைதியும் கிடைக்கும். மனம் ஒரு நிலைப்பட்டு தெளிந்த நீரோடை போல் மலர்ச்சி பெறும். வடமேற்கு மூலை காற்றுடன் தொடர்புடையதாகையால், பூஜையின் போது சொல்லக்கூடிய மந்திரங்கள் உலகெங்கும் பரவி, விரைவில் நல்ல சுகமான வாழ்வை அமைத்துக் கொடுக்கும்.

No comments:

Post a Comment