Tuesday, February 8, 2011

அன்பு

அவசரப்பட்டு பேசாதீர்கள்!

புத்தரிடம் அளவற்ற அன்பும் கருணையும் நிறைந்திருந்ததால் அவர் மனிதகுலத்தை மட்டுமல்ல, மிருகங்களையும் கூட நேசிக்க வேண்டும் என்று போதித்தார். உண்மையான அன்பு பேதம் பார்க்காது.
கண்ணில் காணும் உயிர்கள் அனைத்தையும் அரவணைத்துச் செல்லும் அன்பே உயரிய அன்பாகும்.
யார் கேட்காவிட்டாலும் பரவாயில்லை. நாம் சொல்ல வேண்டியதைச் சொல்லித் தீர வேண்டியது நம் கடமையாகும். வார்த்தையை அளந்து பயனுடையதாகப் பேசுங்கள். ஆலோசனையில்லாமல் அவசரப்பட்டு பேசிவிடாதீர்கள். வாக்கைச் சுத்தமாக வைத்திருக்க நினைப்பவன் எப்போதும் உயர்ந்த நல்ல வார்த்தைகளையே பயன்படுத்துவான். தன்னைத்தானே சோதித்துக் கொள்வதனால் பெருமை உண்டாகும். அதே நேரத்தில் பிறரையே கவனித்துக் கொண்டிருந்தால் அதனால் சிறுமையும், இழிவும்தான் உண்டாகும். உடல் வலிமை <உள்ளவர் ஆணோ, பெண்ணோ அவர் யாராக இருந்தாலும் யாசகம் வாங்கிப் பிழைப்பது கூடாது. தானதர்மத்தினால் மட்டும் உயிர் வாழ நினைப்பவர்கள் தான் கெடுவதுடன் அந்த தேசத்தையும் கெடுக்கின்றனர். புலால் உணவு அத்தியாவசியம் என நினைத்த நான், அறிவாராய்ச்சியின் மூலம் சைவமே உயர்ந்ததென புரிந்து கொண்டேன்.

No comments:

Post a Comment