Tuesday, February 1, 2011

வாழையின் சிறப்பு

பாரத தேசத்தின் கலாச்சாரத்தில் வாழைக்கு முக்கிய பங்கு உண்டு. விழாக்களிலும் வாழை மர தோரணம்… வரவேற்பிலும் வாழைதான்… விருந்து உபசரிப்பிலும் வாழைதான்.

வாழையை நம் முன்னோர்கள் பெண்களாகவே எண்ணி வந்துள்ளனர். வாழையில்லாத வீடு பெண் இல்லாத வீட்டுக்கு சமம் என்று சொல்வார்கள். வாழையை வீட்டைக் காக்கும் பெண் தெய்வமாகவே பழக்காலத்தில் போற்றி வந்துள்ளனர். மங்கள நிகழ்ச்சியென்றால் வாழைக்குத்தான் அதிக பங்கு.வாழையின் ஒரு கிழங்கை நாம் எங்கு நடுகிறோமோ அங்கே ஆரம்பித்து, தளைத்து, வளர்ந்து, மரமாகி, பூவாகி, காயாகி, கனியாகி, மீண்டும் அதன் அடி வாழையிலில் இருந்தே ஒரு புது கன்று தோன்றும். அந்த தலை வாழை போனாலும் மீண்டும் ஒரு குருத்து வரும். இதுதான் வாழையின் இயல்பு.வாழையின் பாரம்பரிய சிறப்பு (Sentimental value) பற்றிக் கூறும் வகையில் சில செய்திகள் அமைந்துள்ளன. விசேஷ வீடுகளில் வாசல்களில் கட்டப்பெறுவது மட்டுமின்றி, புதிதாகக் கட்டிய வீட்டில் முதலாவதாக வாழையையும், தொன்னையையும் தான் நட வேண்டும் என்ற சம்பிரதாயம் தமிழ்நாட்டில் உள்ளது. தென்னம்பிள்ளை என்பதால் அது பிள்ளைக்கு சமானம். வாழைமரத்தின் வேரில் வாழைக்கன்றுகள் உதிப்பதால் வாழை அடி வாழையாக வம்சம் வளர்ந்து அக்குடும்பமும், இல்லமும் செழிப்புடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் வாழைமரம் நடப்பெறுகின்றது.

விருக்ஷங்களில் மிகவும் மங்களம் பொருந்திய வாழை.
வாழையின் அனைத்து பாகங்களுமே மனித ஆரோக்கியத்தை முன்னிருத்தியிருக்கின்றன. இடி தாங்கியாகவும் வாழையே விளங்குகிறது.
வாழை அநேக மருத்துவப் பயன்களைக் கொண்டது. குறிப்பாக விஷப் பூச்சிகளின் தாக்குதலின்றி காக்கும் தன்மை வாழைக்கு உண்டு. இதனால்தான் சுபகாரியங்களில் வாழையை முதன்மையாக நட்டு வைக்கின்றனர்.



No comments:

Post a Comment