Tuesday, February 8, 2011

பொறுமை கடலினும் பெரிது -




Rupa

Moderator













Posts: 18,382

Join Date: Feb 2007

Location: India

பொறுமை கடலினும் பெரிது -
நரன், நாராயணர் என்ற ரிஷிகளை இணைத்து "நர நாராயணர்' என்பதுண்டு. இணைபிரியாத இவர்கள் தவத்தில் மிகவும் சிறந்தவர்கள். தபஸ்விகளுக்கு சற்றும் தொடர்பில்லாத ஆயுதப்பயிற்சியிலும் இவர்கள் இணையற்றவர்களாக இருந்தனர். திருமால் நரசிம்மராக அவதாரமெடுத்து இரண்யனைக் கொன்றபிறகு, பிரகலாதன் அரசுப்பொறுப்பேற்றான்.
அவனைக் காண சவனர் என்ற முனிவர் வந்தார். அவர் பல தீர்த்தங்களில் நீராடியவர். தீர்த்தமாடுவதின் அவசியத்தை பிரகலாதனுக்கு போதித்தார். இதையடுத்து பிரகலாதனும் தீர்த்தமாட புறப்பட்டான். வழியில் நரநாராயண முனிவர்கள் தோளில் வில்லுடன் தியானம் செய்வதைக் கண்டு அதிசயித்தான்.
முனிவர்கள் எழும் வரை காத்திருந்த பிரகலாதன், ""முனிவர்களே! நீங்கள் தபஸ்விகளாக இருந்தும், தவத்திற்கு சற்றும் பொருந்தாத ஆயுதங்களை வைத்திருப்பதேன்?'' என்று கேட்டான். அவர்கள் மிகுந்த அகங்காரத்துடன், ""தபஸ்விக்கு வீரம் இருக்கக் கூடாதா? எங்களை வெல்ல யாராலும் இயலாது. வில்வித்தையில் நாங்கள் மிகவும்
உயர்ந்தவர்கள். உனக்கு இதெல்லாம் எதற்கு? ஓடிப்போய் விடு,'' என அடாவடியாகப் பேசினர். அந்த தபஸ்விகளுக்கு அகங்காரத்தை ஒடுக்க எண்ணிய பிரகலாதன், ""ரிஷிகளே! மரியாதையாக நான் சொல்வதைக் கேளுங்கள். ஆயுதங்களை தூர எறியுங்கள்,'' என்று எச்சரித்தான். அவர்களோ சற்றும் மடங்கவில்லை. ""அடேய் பிரகலாதா! நீ வந்த வழியைப் பார்த்துச் செல், எங்கள் பொறுமையைச் சோதிக்காதே. மீறினால், எங்கள் வில்லும் அம்பும் உன்னையும் பதம்பார்க்கும்,'' என்று கோபமாக கர்ஜித்தனர். பிரகலாதனுக்கு கோபம் எகிறி விட்டது.
""ரிஷிகளே! நான் ஒரு மன்னன். ரிஷிகளோ, சாதாரண பிரஜைகளோ... யாராக இருந்தாலும் ஒழுங்கு தவறி நடக்கும் போது, அதைக் காப்பது மன்னனின் கடமை. நீங்கள் என்னுடன் போருக்கு வாருங்கள். வெற்றி, தோல்வியை நிர்ணயித்த பிறகு மற்றதைப் பேசிக் கொள்ளலாம்,'' என்றான். நரநாராயண முனிவர்களும், பிரகலாதனும் பாணங்களைத் தொடுக்க, நாராயணர் அமர்ந்து பார்க்க ஆரம்பித்து விட்டார். கடும் யுத்தம் பல காலம் நடந்தது. வெற்றி தோல்வி என்பதே இல்லாத நிலையில், திருமால் அவர்கள் முன் தோன்றினார். இரு தரப்பினரும் சண்டையை நிறுத்திவிட்டு திருமாலை வணங்கினர்.
முன்னொரு காலத்தில், நரநாராயணர் தவமிருந்த போது, அவர்கள் இந்திரலோகத்தை பிடித்து விடுவார் களோ என இந்திரன் பயந்தான். இதனால், அவர்களின் தவத்துக்கு மழை, காற்று போன்ற இயற்கை இடையூறுகளை ஏற்படுத்தினான். அதைக் கண்டு நரநாராயணர் அஞ்ச வில்லை. பொறுமையுடன் அவர்கள் தங்கள் பணியைத் தொடர்ந்தனர். இதுகண்டு விரக்தியடைந்த இந்திரன், அவர்களிடம் மன்மதனையும், அப்சரஸ்களையும் அனுப்பி அவர்களை மயக்க ஏற்பாடு செய்தான். அப்சரஸ்களைக் கண்ட அவர்கள் பொறுமையை இழந்து விட்டனர்.
நரமுனிவர், தன் தொடையைத் தட்டி ஒரு பெண்ணை உருவாக்கினார். அவள், அங்கு வந்த மற்ற அப்சரஸ்களின் அழகையெல்லாம் மிஞ்சி விட்டாள். இதுகண்டு மற்ற அப்சரஸ்கள் கண் கலங்கினர். தங்களை மகரிஷி சபித்து விடுவாரோ என்று அச்சம் கொண்டனர்.
""என்னதான் இருந்தாலும், ஒரு மகரிஷி இப்படி பொறுமையிழந்து சாதாரணமானவர்கள் செய்வது போன்று தொடையைத் தட்டி வீரம் காட்டி, ஒரு கன்னியை உருவாக்கலாமா? தபஸ்விகளுக்குரிய பொறுமையை இழந்து விட்டார்களே,'' என்று மற்ற தபஸ்விகள் கேலி பேசினர். இதனால் அவர்களின் தவவலிமை அழிந்தது. மீண்டும் போராடி அவர்கள் தவ வலிமையை அடைந்த போது தான், பிரகலாதனுடன் போராட வேண்டி வந்தது.
இந்த சம்பவத்தை திருமால் அவர்களுக்கு ஞாபகப்படுத்தினார். தவசீலர்களுக்கு மிகுந்த பொறுமை வேண்டும் என அறிவுரை சொன்னார். அதை தபஸ்விகள் ஏற்றனர். பிரகலாதனை வாழ்த்தினர். இந்தக்கதைக்கு பரிசு கிடைக்குமோ கிடைக்காதோ...ஆனால், பொறுமையை கைக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரையை வழங்க வேண்டும்

No comments:

Post a Comment