Saturday, February 26, 2011

தண்ணீரை தொடர்ந்து சிந்தச் செய்தால் வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடு நீங்குமா?

தண்ணீரை தொடர்ந்து சிந்தச் செய்தால் வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடு நீங்குமா?

வாஸ்து குறைபாடு உள்ளதாகக் கூறப்படும் வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள குழாயில் தண்ணீர் தொடர்ந்து வழிந்து/சிந்திக் கொண்டிருக்கும் வகையில் அமைத்தால் அந்த குறைபாடு நிவர்த்தி ஆகும் எனக் கூறப்படுகிறது? இது உண்மையா?
பதில்: பொதுவாக தண்ணீரை சக்தியின் மறுவடிவமாகவே பார்க்க வேண்டும். வன தேவதைகளைப் போல் ஆற்று தேவதை, நதி தேவதைகளும் உண்டு. ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவது கூட தண்ணீரை தெய்வமாக மதிப்பதன் உள்அர்த்தம்தான். எனவே தண்ணீரை வீணக்குவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தண்ணீர் போல் பணம் செலவாகிறது என்று சொல்வதன் உள்அர்த்தம் கூட தண்ணீரை அதிகம் செலவழித்தால் பணம் தங்காது என்பதே. எனவே, தண்ணீரை வழிய விடுவதும், சொட்டு சொட்டாக சிந்த விடுவதும் எந்த வகையிலும் பரிகாரம் ஆகாது.
ஆனால், ஆலயங்களில் இதுபோன்ற செயல்களுக்கான பலன்கள் வேறு மாதிரியானவை. சிவன் கோயில்களில் கலசத்தில் உள்ள தீர்த்தம் சொட்டுச் சொட்டாக மூலவரின் மேல் விழச் செய்வது அதன் சக்தியை அதிகரிக்கும். இந்த விதி வீடுகளுக்கு பொருந்தாது.
பொதுவாக வீட்டில் உள்ள குழாய்களில் தண்ணீர் தொடர்ந்து சிந்திக் கொண்டிருந்தால் அது தம்பதிகளுக்கு ஆகாது. கணவன்-மனைவிக்குள் பிரிவு, சண்டை, சச்சரவு, சிக்கல், கருத்து மோதலை ஏற்படுத்தும். எனவே, வாஸ்து குறைபாட்டை நீரை வீணடிப்பதன் மூலம் எந்த விதத்திலும் நிவர்த்தி செய்ய முடியாது.ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்




No comments:

Post a Comment