Monday, February 7, 2011

மனிதனின் முதல் கடமை! -

மனிதனின் முதல் கடமை! -
மனிதனின் முதல் கடமை மனதில் உள்ள ஆசைகள் அனைத்தும் எப்போது அழிக்கப்படுகிறதோ, அப்போது மனிதன் மரணத்தைவென்றவனாகிறான்.
அம்மனிதன் உடல் இருக்கும் போதே பிரம்மத்தை
(தெய்வம்) அடைந்தவன் ஆவான். மனதைத் தூய்மையாக்குவதே மனிதனின் முதல் கடமை. மனதைத் தூய்மையாக்குவதற்கு பதிலாக மலைக் குகைகளுக்கும், வனங்களுக்கும், புனிதத்தலங்களுக்கும் சென்று வருவதால் பயனில்லை.
மனம் என்னும் கண்ணாடியை மனிதன் தூய்மையாக
வைத்திருக்க வேண்டும். தூய்மையான கண்ணாடியில்
பிம்பம் விழுவதைப் போல, தூய்மையான மனதில்
ஆண்டவனின் உண்மையான வடிவத்தைக் காணலாம்.
இவ்வுலகத்தை ஆராய்ந்து பார்த்தால் ஒரு உண்மை
புலனாகும். இவ்வுலகத்தில் மனிதனுக்கு உண்டாகும்
துன்பங்களுக்குக் காரணமாக இவ்வுலகமே அமையவில்லை.
மனிதர்கள் அடைகின்ற துன்பத்திற்குக் காரணம் அவனது
மனமே. துன்பத்திற்கு தானே காரணகர்த்தாவாக இருந்து
தனக்குத் தானே துன்பத்தைத் தேடிக் கொள்கிறான்.
இல்லறத்தானாக வாழ விரும்பினால், உன் வாழ்வை
மற்றவர்களின் நன்மைக்காக ஒரு பலியாக அர்ப்பணித்து விடு.
--விவேகானந்தர்

No comments:

Post a Comment