Friday, February 11, 2011

அஷ்டமி, நவமி திதி

அஷ்டமி, நவமி திதி

அஷ்டமி...நவமி எனக்கு தெரிந்தவரை "இன்னைக்கு நாள் நல்ல இல்லை.","இன்னைக்கு அஷ்டமி எந்த நல்ல காரியமும் தொடங்ககூடாது' போன்ற வரிகள் அனைத்து வீடுகளிலும் ஒலித்து கொண்டிருக்கும்.என் அப்படி சொல்கிறார்கள்? அஷ்டமி, நவமி திதிகளில் தொட்டது துலங்காது என முன்னோர்கள் கூறுவர். அஷ்டமி, நவமி திதிகளில் மேற்கொள்ளும் காரியங்கள் விரைவில் முடிவுக்கு வராது; தொடர்ந்து கொண்டே போகும் என்பதாலேயே அப்படிக் கூறினர். கோகுல அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அந்தத் திதியில் பிறந்த காரணத்தால் அவர் எத்தனை கஷ்டங்களை அனுபவித்தார். அவதார புருஷன் என்பதால் அவற்றை சமாளித்தார்; இறுதியில் வெற்றி பெற்றார். இதேபோல் நவமியில் பிறந்த ராமர், அரியணை ஏற்கும் நேரத்தில் மறஉடை தரித்து காட்டிற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சீதையை பிரிந்து அவர் பட்ட துயரங்கள் எல்லாம் நவமி திதியில் அவர் பிறந்த காரணத்தால்தான் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதனால் தான் அஷ்டமி,நவமி திதிகளில் நல்ல காரியங்களை தொடங்குவது நல்லதில்லை என்று பெரியோர்கள் கூறுகிறார்கள்

1 comment:

  1. எட்டை எல்லோரும் வெறுப்பர் உலகில். ஆனால் இந்த எட்டு தான் நம்மை ஆள்கிறது.
    இன்று அஷ்டமி நல்ல காரியம் செய்ய கூடாது என்கின்றனர். அஷ்டமியில் தானே கண்ணன் பிறந்தான். கண்ணன் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடுகிறோமே!

    எட்டாக உள்ள கண்கள் தான் கண்ணன் இருப்பிடம், இதுவே ஞானம்!
    நம் முன்னோர்கள் பலரும் இந்த எட்டை பலபல பரிபாஷையில் பாடி உள்ளனர். இரண்டு பூஜியத்தை தொட்ட படி போட்டால் அது எட்டு. நிமிர்ந்து நின்ற 8 ஐ படுக்க வைத்தால் போல் ! இரண்டு கண்கள் போல் உள்ளது அல்லவா?

    "பூஜ்யத்துகுள்ளே ஒரு ராஜ்யத்தை ஆண்டு கொண்டு புரியாமல் இருப்பன் ஒருவன் அவனை புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்" என கவியரசு கண்ணதாசன் பாடியுள்ளார்.
    http://sagakalvi.blogspot.in/2012/04/blog-post_16.html

    ReplyDelete