Thursday, February 3, 2011

காயத்ரி மந்திரம் மருத்துவரீதில் சிறந்தது தான்




விஞ்ஞான ரீதியில் பார்த்தாலும் இது மிகப் பெரும் உடற்பயிற்சி தான்.

விளக்கம் அடியில் இருக்கிறது.



ஓம்பூர்புவ: ஸுவ:

தத்ஸவிதுர்வரேண்யம்

பர்கோதேவஸ்யதீமஹி

தியோயோன: ப்ரசோதயாத்



YouTube Video





என்று ஆரம்பிக்கும் இம் மந்திரத்தில் ஏதோ சக்தி இருக்கிறது என்பதை கட்டாயம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இதை முறையாக ஒரு முறை செய்து பார்த்தால் வாழ்வில் வரும் மாற்றங்களை வைத்து நீங்கள் உணரலாம். சமைப்பதென்றால் கூட ஒரு முறையிருக்கிறதல்லவா. அப்படித்தான் இதுவும். இதற் கென்றொரு முறையிருக்கிறது.





இம் மந்திரத்தை விசுவாமித்திர முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின் ) மூன்றாவது மண்டலத்தில் (3.62.10 உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். என்று அழைக்கிறார்கள்.





இனி ஓதும் முறையைப் பார்ப்போமா? முதலில் உடல் சுத்தமாக இருக்க வேண்டும். ஒரு தூய இடமொன்றில் நின்றபடியோ அல்லது சப்பாணியிட்டோ அமர்ந்து ஓத வேண்டும்.





தொடங்கும் முன் ஓம்…….ஓம்………ஓம்…… என பிரணவ மந்திரத்தை 3 தரம் சொல்லித் தொடங்க வேண்டும்.

பின் மந்திரத்தை கீழ் சொன்னது போன்று கூற வேண்டும்.





மூச்சை உள்ளெடுத்துக் கொண்டு

ஓம்பூர்புவ: ஸுவ என்ற வரியை சொல்ல வேண்டும்.





பின் மூச்சை தம் கட்டிக் கொண்டு

தத்ஸவிதுர்வரேண்யம் என்ற வரியை சொல்ல வேண்டும்.





பின் மூச்சை வெளிவிட்டபடி

பர்கோதேவஸ்யதீமஹி என்ற வரியை சொல்ல வேண்டும்





இறுதியாக சுவாசத்தை நிறுத்தி

தியோயோன: ப்ரசோதயாத் என்ற வரியை சொல்ல வேண்டும்.





இப்படி 108 தரம் சொல்ல வேண்டும். முடிக்கையிலும் பிரணவ மந்திரம் சொல்லித்தான் முடிக்கணும்.

நான் இம் மந்திரத்தால் பலதை அடைந்திருக்கிறேன். குறிப்பாக சொன்னால் பல தடவை உயிர் தப்பியிருக்கிறேன்.

இதன் விஞ்ஞான காரணம் பார்த்தால் முக்கியம் மூச்சு பயிற்சி தான் ... “நாம் எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக சுவாசிக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அதிக காலம் அதிகமாக உயிர் வாழலாம். உதாரணமாக ஆமைகள் நிமிடத்திற்கு 4 தரம் சுவாசிப்பதால் தான் 500 ஆண்டுகள் வாழ்கிறது” என்கிறார். இதையும் விஞ்ஞானம் தான் சொல்லியிருக்கிறது.



No comments:

Post a Comment