Tuesday, February 8, 2011

சாயுஜ்யம் பெற உதவும் ஏணிப் படிகள்

சாயுஜ்யம் பெற உதவும் ஏணிப் படிகள்


1. மோக்ஷம் பெற வேண்டும் என்ற வைராக்கியம் மற்றும் குறிக்கோள்.
2. ஈஸ்வர உபாசனை.
3. ஈசனின் அருளை வேண்டி காத்திருத்தல். ^
4. தாம் வணங்கும் முறையில் அல்லது காணும் வடிவத்தில் எல்லாம் ஈசனை காணுதல்.
இன்றைய சூழலில் அவதிப்படும் பல ஆன்மாக்களின் நன்மைக்காக சிலவற்றை எழுதலாம் என்று ஈசனின் அருள் கொண்டு உயரப் பறக்கும் பறவையின் பார்வையில் தென்படும் காட்சி போல் அடியேன் அறிந்து உணர்ந்தவற்றை எழுதுகிறேன்.
மேலுள்ளவையும், பின்வரும் அனைத்துமே எளிதாகத் தோன்றினாலும், செயல்முறை என்று வரும்பொழுது பல தடைகளும் சித்தர்கள் மற்றும் குருமார்களின் சாபமும் நம்மையறியாமல் நம்மிடம் வந்து சேரும். முதலில் அதை நிவர்த்தி செய்த பிறகே உண்மையான வழியில் செல்ல முடியும். எனவே சாப நிவர்த்தி என்பது குரு உள்ளவரும் இல்லாதவரும் செய்ய வேண்டிய மிகப்பெரிய செயல்.

சாப நிவர்த்தி ஒவ்வொரு செயலுக்கும் வேறுபடும், இதை அறிந்து கொள்ளத்தான் குரு வேண்டும். குரு இல்லாதவர்களின் பாடு திண்டாட்டம் தான். ஈசனோ அல்லது சித்தர்களோ குருவாக அமர்ந்துவிட்டால் எல்லாம் தானாக தெரிய வரலாம். அது மட்டும் அல்லாது வினைப்பயனைப் பொருத்தும் பல நற்செயல்களை செய்யமுடியாது. எனவே சாப நிவர்த்தி அல்லது சாந்தி பரிகாரம் செய்த பின்னர் உபாசனையைத் தொடங்கினால் சித்திக்க வாய்ப்பு உள்ளது.

எல்லா செயல்களுக்கும் பொதுவான சாந்தி முறை என்னவென்றால்,
1. கோவில் சென்று இறைவனை மனமுருகி வேண்டி நெய்விளக்கு ஏற்றுதலும்
2. அன்னதானமும்
3. வஸ்த்ர தானமும்
4. ஏழைகளின் கல்விக்கு உதவுதலும்
5. பௌர்ணமி கிரிவலம்
6. முடிந்த வரை கோபத்தை கட்டுப்படுத்தலும7. தீய பழக்கவழக்கங்களை தள்ளுதலும்
8. பெரியோர்களை மதித்தலும்
9. தாய் தந்தையரை தினம்தோறும் அவர்தம் பாதத்தில் நமது சிரசுபட வணங்குதலும்
10. மற்றும் எல்லோரிடத்திலும் அன்பாய் இருத்தலுமே
இவையனைத்தும் நம்முள் ஒரு நல்ல சக்தியை உருவாக்கி தீய சக்திகளை வெளியேற்றும். இது ஒரு பொதுவான சாப நிவர்த்தி அல்லது சாந்தி பரிகாரம்.
இதைச் செய்தாலே உபாசனை என்னும் இரண்டாம் படிக்கு வழி பிறக்கும். இதைக்கூட பலரால் செய்ய இயலாமல் போகலாம். வீடுபெற வேண்டும் என்ற வைராக்கியம் உள்ளவரே இதைச் சாதிக்க முடியும். அதை மனதில் கொண்டு முதல்படியான வைராக்கியத்தை வளர்க்கவும்.
மேல் சொன்ன நல்ல பழக்கவழக்கங்களை தொடர்ந்து கொண்டு உபாசனையும் செய்தால் சாயுஜ்ய பாதையில் செல்ல முடியும். இல்லையென்றால் அதுவும் பாதியில் நின்று பாதையை மாற்றிவிடும். எனவே கத்திமேல் நடப்பதுபோல் நாம் மிகவும் கவனமாக செயல்களை கவனித்து யோசித்து ஆற்றினால் மட்டுமே சாயுச்சியப் பாதையில் தொடர்ந்து செல்லலாம்.
என்ன உபாசனை செய்வது, எப்படி செய்வது என்பதற்கு ஒரு கணக்கும், கால நேர அளவுகளும் உண்டு. எல்லாவற்றையும் அருவிபோல் கொட்டாமல் அணையில் உள்ள நீர் போல் ஞானப் பாசனத்திற்கு தேவையான விடயங்களை தேவையான நேரத்தில் தொகுத்து அளிக்கிறோம். அது வரை மேற் சொன்ன நற்செயல்களை செய்யத் தொடங்கினால் தடைகள் விலகி பாதை தென்படும்.
மேலும் தங்களின் நற்காரியங்களையும�� �, யோசனைகளையும் இக்குழுமத்தில் உள்ள அனைவரும் (பகிர்ந்து கொள்ள முடிந்த விடயங்களை மட்டும் :-) ) பகிர்ந்து கொண்டால் ஏனையோர்களுக்கு உதவியாக இருக்கும்.
வைராக்கியத்தை வளர்க்கவும். குறிக்கோள் கொண்டு பயணிக்கவும் . இதைத் தொடர்ந்தாலே
உலகை ரட்சிக்கும் சித்தேஸ்வரரின் அருளும், எம் சித்தேஸ்வரரின் இடப்பாகம் அமர்ந்த தாய் மனோன்மணியின் அருளும், கைலாய பரம்பரையின் ஆதி சித்தராம் ஆசான் அகத்தியரின் அருளும், சித்தேஸ்வரருக்கு ஆதி சித்தருக்கும் குருவாம் எம் குரு சுப்பிரமணியரின் அருளும், எம் தந்தை பச்சைமாலின் அருளும், மூலவர்க்க குருவாம் திருமூல அய்யரின் அருளும், அண்ணல் போகரின் அருளும், பதினெண் சித்தர்களின் அருளும், சகல மகான்களின் அருளும் வந்தடையும் என்பது திண்ணம்.



No comments:

Post a Comment