Wednesday, February 9, 2011

வீடு கட்டும் முன் செய்ய வேண்டியவை?

வீடு கட்டும் முன் செய்ய வேண்டியவை?

வாஸ்து புருஷன் விழித்திருக்கும் நேரத்தைப் பார்த்து வீடு கட்ட ஆரம்பிக்க வேண்டும். இந்த வாஸ்து முகூர்த்தம் ஏதேனும் காரணத்தில்
விட்டுப் போய்விட்டால் திங்கள், புதன், வெள்ளிக்கிழமையில் வரும் முகூர்த்த நாட்களில் பூமி பூஜை செய்யலாம். ஆனால் அந்த வீட்டில் வாழப் போகும் பெண்மணியின் ஜாதகத்தில் நாலாம் ஸ்தானம் வலுத்திருக்க வேண்டும். அன்றைய தினம் சந்திராஷ்டம் இல்லாமல் இருக்க
வேண்டும். சனி, ராகு அல்லது கேது அந்த இடத்தில் இல்லாமலோ அல்லது அதன் பார்வை இல்லாமலோ இருக்க வேண்டும்.
வாஸ்து பூஜை மூன்று சமயங்களில் செய்ய வேண்டும். முதலாவதாக பூமி பூஜை, வீட்டின் வடகிழக்குப் பகுதியில்தான் செய்யவேண்டும். பூமி பூஜைக்குத் தேர்ந்தெடுத்த இடம் கட்டடத்திற்குள் வருமாறு இருத்தல் அவசியம். பூஜை ஆரம்பிக்கும் முன் அந்த இடம் சுத்தம் செய்யப்பட வேண்டும். இந்தப் பூஜையை நன்றாகத் தெரிந்த ஒரு சாஸ்திரிகள் மூலம் செய்ய வேண்டும்.
பூஜை ஆரம்பிக்கும் முன் தம்பதிகள் கிழக்கைப் பார்த்து அமர வேண்டும். அந்த இடத்தில் நதியின் மணலைப் பரப்பி, ஒன்பது செங்கல்களை வைக்க வேண்டும். இவை ஒன்பது கிரகங்களாக எண்ணப்படுகின்றன. அவை மேல் அரிசி மாவினால் கோலம் போல் இரட்டை இழைகள் போட்டு மஞ்சள் குங்குமம் இட்டு பூஜை ஆரம்பிக்க வேண்டும்.
பின் அங்கு பிள்ளையார் படமும் குலதெய்வப் படமும் வைத்துப் பூஜிக்க வேண்டும். விக்னமில்லாமல் வீடு அமைய கணபதியை வேண்ட வேண்டும். பூஜை முடியும் போது கற்பூரம் காட்டி வழிபட வேண்டும். சிலர் வடகிழக்குப் பகுதியில் ஆழமான குழி தோண்டி, பின் அதற்குள் இந்தப் பூஜை செய்வது வழக்கம். சிலர் அஷ்ட திக்கிலும் இது போல் பூஜை செய்து அஷ்ட திக் பாலகர்களுக்கும் பூஜை செய்வதுண்டு. ஆனால் இன்றைய இயந்திர யுகத்தில் அத்தனை விரிவாகச் செய்வது மிகவும் குறைந்துவிட்டது.
பூஜை முடிந்த பின் மணலை ஓடும் நதியிலோ, கிணற்றிலோ போட்டுவிடலாம். ஆனால் பூஜை செய்த செங்கல்லைப் பத்திரமாக எடுத்து
வைத்துக்கொண்டு, வீடு கட்டும் போது உபயோகிக்க வேண்டும். இந்தப் பூமிபூஜையின் போது வாஸ்து பூஜையும் செய்யவேண்டும். பின்
வாழைப் பழம், இனிப்பு, பிரசாதம் படைத்து அங்கு இருக்கும் ஏழைகளுக்கும் வீடு கட்ட உதவும் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும்.





No comments:

Post a Comment