Tuesday, February 8, 2011

அழையா விருந்தாளி!

அழையா விருந்தாளி!
அந்த திருமண மண்டபம், உள்ளும், புறமும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பிரபல கட்சித்தலைவரின் முன்னிலையில் திருமணம் என்பதால் அலங் காரத்தில் மெகா கவனம் கூடியிருந்தது. சரியாக நண்பகல் 11.45 க்கு சகாக்களுடன் மண்டப வாயிலில் வந்திறங்கினார் தலைவர். அடுத்த அரை மணி நேரத்தில் திருமணம் அழகாய் முடிந்தது. மதிய விருந்துக்கு அரை மணி நேர அவகாசமிருந்தது. தனியறையில் அமர்ந்து முக்கியமானவர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார் தலைவர். முன்கூட்டியே நேரம் வாங்கியிருந்த முனவர், தலைவரின் உதவியாளரிடம் அனுமதி பெற்று அறைக்குள் பிரவேசித்தான். தலைவர், எழுந்து வரவேற்றார். பதினைந்து நிமிடங்கள் கட்சி விஷயம், சொந்த விஷயம், எல்லாம் பேசிவிட்டு எழுந்தான் முனவர்.

""நம்மோட சாப்ட்டுட்டு போலாமே பாய்!'' தலைவர்.""இல்ல, தலைவரே... எனக்கு அழைப்பு இல்ல!''
""என்னோட வர்றதுக்கு தனியா எதுக்கு அழைப்பு?''
""அப்டியில்ல தலைவரே. என்னை மன்னிச் சிக்கங்க. "அழைக்காமல் விருந்தில் நுழைபவன், திருடனாக நுழைந்து, கொள்ளைக்காரனாய் திரும்பு கிறான்...' என எங்க நபிகள் நாயகம் கூறியிருக்காங்க. ஆதாரம்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அபூதாவூது!''- முனவர்.
""அப்ப சரி. அவங்க மார்க்கம் சொன்னதை தான முனவர் கடைபிடிப்பார். நீங்க கிளம்புங்க முனவர்!''
முனவரை அனுப்பிவிட்டு உதவியாளரை அழைத் தார் தலைவர், ""இந்த திருமணத்துக்கு அழைப்பு உள்ளவங்க மட்டும் என்னோடு வரட்டும்; மத்தவங்களுக்கு நம்ம செலவுல பக்கத்து ஹோட்டல்ல சாப்பிட ஏற்பாடு செஞ்சிரு!'' உத்தரவிட்டார்.

"ஏனிந்த மாற்றம்?' புரியாமலேயே, ""சரி!'' என தலையாட்டினார் உதவியாளர்.

No comments:

Post a Comment