Saturday, February 12, 2011

ஆவதும் “பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே”

ஆவதும் “பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே”
அதற்கான விளக்கம் ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்து. புகுந்த வீட்டிற்கு அனுப்பும் பொழுது மணமகன் வீட்டார்க்கு எச்சரிக்கையாக சொல்லப்பட்ட பழமொழி இது, அதாவது இரு வீட்டாருடைய அடுத்த தலைமுறையைக் கருவாக்கி உருகொடுப்பதும். கருவை சிதைத்து உருகலைப்பதும் இரண்டும் இந்த பெண்ணாலேயே நிகழ்கிறது, ஆகவே தங்கள் தலைமுறை தழைக்க வேண்டுமென்றால் மனநிறைவோடு வைத்துக் கொள்ள வேண்டும், அப்படி வைத்துக் கொண்டால் தான் சுகமான பிரசவத்தை அவள் அனுபவித்து அவர்களின் வாரிசை பெற்றெடுப்பாள்,

இதைதான் ஆவதும் “பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே” என்று குறிப்பிட்டார்கள், இந்த பழமொழி சொல்லப்பட்ட காலக்கட்டத்தில் பெண்கள் ஒரு சிறு துன்பத்தையும் தாங்கிக் கொள்ளாமல் வயிற்றில் கருவை சுமந்து கொண்டிருந்தாலும் ஆற்றிலோ. கிணற்றிலோ. ஒரு முழக்கயிற்றிலோ தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வார்கள், இதை தடுக்கவே இந்த பழமொழி சொல்லப்பட்டது,



No comments:

Post a Comment