Sunday, February 27, 2011

ருத்ராட்சத்தை யார் யாரெல்லாம் அணியலாம்?






செய்திகள்
விளையாட்டு
பொழுதுபோக்கு
ஆன்மிகம்
இதர வாசிப்பு
சேவைக‌ள்
புகை‌ப்பட‌ங்க‌ள்

உலகச் செய்திகள்நாடும் நடப்பும்வ‌ணிக‌ம் உலக‌க்கோ‌ப்பை 2011கட்டுரைகள்ஆ‌ட்ட ‌நிலவர‌ம் சினிமாசுற்றுலாசிரி அருளுரைபுனிதப் பயணம்ஜோ‌திட‌ம் ‌சி‌த்‌திர‌க் கதைக‌ள்காதல் தேசம்மரு‌த்துவ‌ம் ஜாதக‌ம்செ‌ய்‌திக‌ள்‌விள‌ம்பர‌ங்க‌ள் செ‌ய்‌திகள்‌சிற‌ப்புக‌ள்‌சி‌னிமா



செய்திகள்உலகச் செய்திகள்நாடும் நடப்பும்வ‌ணிக‌ம்ச‌ந்தைசு‌ற்று‌ச்சூழ‌ல்நே‌ர்முக‌ம்தமிழகச் செய்திகள்தேசியச் செய்திகள் விளையாட்டுஉலக‌க்கோ‌ப்பை 2011கட்டுரைகள்ஆ‌ட்ட ‌நிலவர‌ம்விளையாட்டு20-20கிரிக்கெட்ஐ‌பிஎ‌ல் பொழுதுபோக்குசினிமாசுற்றுலாசிரிசின்னத்திரை புகை‌ப்பட‌ங்க‌ள்செ‌ய்‌திகள்‌சிற‌ப்புக‌ள்‌சி‌னிமா‌விளையா‌ட்டுகோ‌யி‌ல்க‌ள்கவ‌ர்‌ச்‌சி‌ப் பட‌‌‌ம்சு‌ற்றுலாகரு‌த்து‌ப்பட‌ம்‌ஆ‌ன்‌மிக‌ம் ஆன்மிகம்அருளுரைபுனிதப் பயணம்ஜோ‌திட‌ம்நம்பினால் நம்புங்கள் இதர வாசிப்பு‌சி‌த்‌திர‌க் கதைக‌ள்காதல் தேசம்மரு‌த்துவ‌ம்யோகாஇன்றைய மங்கைவெப்துனியா சிறப்புஎன்.ஆர்.ஐவெ‌ப்து‌னியா ‌சிற‌ப்பு 2008இலக்கியம்அறுசுவைகுழந்தைகள் உலகம் சேவைக‌ள்ஜாதக‌ம்செ‌ய்‌திக‌ள்‌விள‌ம்பர‌ங்க‌ள்‌‌மி‌ன்ன‌ஞ்ச‌ல்நா‌ட்கா‌ட்டிக‌ணி‌னி ‌விளையா‌ட்டுதேடவு‌ம்எனது வெ‌ப்து‌னியாகரு‌வி‌ப்ப‌ட்டி‌வீடு மனை வா‌ங்கந‌ட்புவா‌ழ்‌த்துக‌ள்தே‌ர்வு முடிவுக‌ள்நாட‌ல்‌வினாடி-‌வினா





ரா‌சி பல‌ன்
‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
எ‌ண் ஜோ‌திட‌ம்
டார‌ட்
க‌ட்டுரைக‌ள்
ப‌ரிகார‌ங்க‌ள்
ஆலோசனை
பூ‌ர்‌வீக ஞான‌ம்
கே‌ள்‌வி-ப‌தி‌ல்
வா‌ஸ்து
‌பிரபல‌ங்க‌ள்

முதன்மை பக்கம் ஆன்மிகம் » ஜோ‌திட‌ம் » பூ‌ர்‌வீக ஞான‌ம் » ருத்ராட்சத்தை யார் யாரெல்லாம் அணியலாம்?

ருத்ராட்சத்தை யார் யாரெல்லாம் அணியலாம்?
புதனுடைய அம்சமாக, அதாவது சிவனுடைய அம்சமாக கருதப்படுவது ருத்ராட்சம். சிவனின் அங்கத்திலிருந்து விழக்கூடிய வேர்வை என்றெல்லாம் சில புராணங்கள் சொல்கின்றன.
ருத்ராட்சத்திற்கு இயல்பாகவே மருத்துவ குணங்கள் நிறைய உண்டு. ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். சிலரெல்லாம் போகம் செய்யும் போது இருக்கக்கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் கியைடயாது, போகிக்கும் போது கூட இருக்கலாம். தீட்டு என்பது கிடையாது.
ஆனால், ருத்ராட்சத்தை தங்கம் அல்லது வெள்ளியில் கட்டி அணியும் போது, மந்த்ரா உபதேசம் பெற்று, குருநாதர் கையில் இருந்து வாங்கி அணியும் போதெல்லாம் மிகவும் நேமமிஷ்டையுடன் இருக்க வேண்டும். அதாவது தீட்சையாக தரும் ருத்ராட்சத்தை பெற்றுக்கொண்டு தவறான செயல்கள், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக் கூடாது.
ஆண், பெண் என இருபாலருமே ருத்ராட்சத்தை அணியலாம். பெண்களுக்கு இருக்கக்கூடிய இயல்பான இடர்பாடான நாட்களில் கூட அணிந்திருக்கலாம். அது ஒன்றும் குரோதம் கிடையாது. வட இந்தியப் பெண்கள் சிலர் தலையில் போடும் கிளிப்புகளில் கூட ருத்ராட்சத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடிய சக்தியும், மன அழுத்தத்தை குறைக்கும் சக்தியும் ருத்ராட்சத்திற்கு உண்டு. பக்கவாதத்திற்கு முந்தைய காலகட்டத்தில் ருத்ராட்ச மாலையை உடம்பு முழுவதும் தேய்த்துவிடும் போது அது சரியாகிறது.
இன்றைக்கும் தரமான, பழமைவாய்ந்த சித்த வைத்தியர்கள் கால் முடக்கம், கை முடக்கம் இதற்கெல்லாம் மருந்தும் கொடுத்து, ருத்ராட்ச மாலையால் கை, கால்களை உருவி மருத்துவம் அளிக்கும் வழக்கமெல்லாம் இன்றைக்கும் இருக்கிறது.
சீரான இரத்த ஓட்டங்கள், கால் மறத்துப் போகாமல் இருப்பதற்கு போன்றவற்றிற்கும் ருத்ராட்சம் பயன்படும். ருத்ராட்சத்தின் சிறு துளியை இழைத்து உள்ளுக்கு சாப்பிடும் போது நோய் எதிர்ப்புச் சக்தியெல்லாம் அதிகரிக்கிறது. உடலிற்கு ஒரு மினுமினுப்பைக் கொடுக்கும். இதுபோன்ற மருத்துவக் குணங்கள் ருத்ராட்சத்திற்கு உண்டு. அதனால் யார் வேண்டுமானாலும் அணியலாம்.

No comments:

Post a Comment