Monday, February 7, 2011

பாவம் செய்து பணம் சேர்க்காதீர்! -- எச்சரிக்கிறார் மகாவீரர்

பாவம் செய்து பணம் சேர்க்காதீர்! -- எச்சரிக்கிறார் மகாவீரர்
* அறவழியில் நிலையாக வாழ்ந்து எல்லா உயிரினங்கள் மீதும் இரக்கம் காட்டுங்கள். கொல்லாமை வழியில் வாழ்பவன் எல்லா இன்பங்களையும் பெறும் தகுதி பெறுவான்.
* நன்மை தரும் உண்மையை மட்டும் பேசுவதில் உறுதி கொள்ளுங்கள். பேச்சானது கடினமானதாகவோ, மற்றவர்களுக்குத் துன்பம் தருவதாகவோ இருந்தால் அதை அறவே தவிர்த்து விடுங்கள்.

* ஆமை தன் உறுப்புக்களை உள்ளே அடக்கிக் கொள்வதுபோல, ஒரு மனிதன் உலக நுகர்ச்சிகளில் இருந்து தன்னைத் தானே விடுவித்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

* பணத்தை அமிர்தம் என்று நினைத்து பாவச்செயல்களின் மூலம் சம்பாதிப்பவன் மரணத்தோடு தன்னை பிணைத்துக் கொண்டு மீளாத நரகத்திற்கு தயாராகிறான்.

* கோபம், பொறாமை,நன்றியின்மை, வீண்பிடிவாதம் ஆகிய தீய குணங்கள் மனிதப்பண்பினை அழித்துவிடும் தன்மை கொண்டவை.

* இல்லறத்தில் இருந்தாலும் சரி, துறவறத்தில் இருந்தாலும் சரி ஒழுக்கம் தான் மனிதனுக்கு மிக அவசியமானது. நல்லொழுக்கம் ஒன்றே நம்மை திவ்யகதியில் சேர்க்க வல்லதாகும்.

* எவன் பிறருடைய சுகத்திற்காகவும், நன்மைக்காகவும் தன்னால் ஆன முயற்சிகளைச் செய்கிறானோ அவனுக்கு சுகமும் நன்மையும் தானாகவே வந்து சேரும்.

No comments:

Post a Comment