Monday, February 28, 2011

கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனக் கூறுவது ஏன்?

கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனக் கூறுவது ஏன்? இயல்பு நிலையில் ஏற்படும் மாற்றத்தையே ஜோதிட ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் கிரகணம் எனக் கூறுகிறோம். கிரகணம் நிகழும் நேரத்தில் சூரியன் அல்லது சந்திரனில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் தடுக்கப்படுவதால் செயற்கையான இருட்டு ஏற்படுகிறது.
இதன் காரணமாக பூமியில் வாழும் உயிரினங்கள், தாவரங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே கர்ப்பிணிப் பெண்கள், இதயம் பலவீனமாக இருப்பவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கிரகணத்தின் போது வீட்டை விட்டு வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது என முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கிரகண நேரத்தில் வீட்டிற்குள் இருக்கும் போது சூரியன் அல்லது சந்திரனின் நேர்மறைக் கதிர்களின் தாக்குதலில் இருந்து தப்ப முடியும்.
இதேபோல் சூரிய/சந்திர கிரகணங்களில் பிறப்பவர்கள் ஜோதிட ரீதியாக சில இன்னல்களைச் சந்திக்க வேண்டி வரும். இது ஒவ்வொரு ராசி/லக்னத்திற்கும் வேறுபடும். ஏனெனில் கிரகண நேரத்தில் பிறப்பவர்களின் ஜாதகத்தில் சூரியன்/சந்திரன், சாயா கிரகங்களான ராகு/கேதுவுடன் இணைந்திருக்கும். இதன் காரணமாக அவர்களுக்கு சில பாதிப்புகள் ஏற்படும்.

No comments:

Post a Comment