Tuesday, February 8, 2011

ஒவ்வொரு முடிக்கும் நன்மை...

ஆட்டை கொண்டு வந்து நிறுத்தினான் பணியாள் முத்துச்சாமி. ஆட்டை கையால் பற்றி, கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கொடுத்தார் ஹாஜியார். ஆட்டின் கண்களில் படாமல் கத்தியைத் தீட்டினார்.
"அல்லாஹு அக்பர் அல்லாஹு' அக்பர்! லா இலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர்! அல் லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து!'' என, தக்பீர் முழங்கினார் ஹாஜியார்; சூழ நின்ற குடும்பத் தினரும் தக்பீர் முழங்கினர்.
""பிஸ்மில்லாஹு அல்லாஹு அக்பர்!'' சொல்லிக் கொண்டே ஆட்டை அறுத்தார் ஹாஜி யார். அறுபட்ட நரம்பு வழியே ரத்தம் பீரிட்டது. சற்று நேரத்தில் ஆடு அடங்கிப் போனது.
ஹாஜியாரை சொரண்டினான் பேரன் முஸ்தபா... ""நானா, இந்த ஆட்டை எதுக்கு அறுத்தீங்க?''
""அல்லாஹுவுக்காக இத நாம் அறுத்தம் செல் லமே!''
"இந்த ஆட்டை அறுத்ததால் நமக்கு என்ன நன்மை நானா?''
ஒன்பது வயது சிறுவனின் கேள்வியை காதுற்ற குடும்பம், ஹாஜியாரின் பதிலுக்காக உன்னித்தது. ""நபிகள் நாயகத்திடம், "குர்பானி எதற்காக?'ன்னு நபிதோழர்கள் கேட்டிருக்காங்க முஸ்தபா. "குர்பானி இபுறாஹீம் நபியின் வழிமுறை!'ன்னு பதில் கொடுத்திருக்காங்க நம்ம நபிகள் நாயகம். நீ கேட்ட மாதிரியே, "இதனால் நமக்கென்ன நன்மை?'ன்னு, நபிதோழர்கள் கேட்டிருக்காங்க. உடனே, "ஒவ் வொரு முடிக்கும் ஒரு நன்மை!'ன்னு நபிகள் நாயகம் பதில் சொல்லியிருக்காங்க முஸ்தபா! இதற்கான ஆதாரம்: நபிகள் நாயகம் ஸைது பின் அர்கம்(ரலி) முஸ்லிமில் உள்ளது!''
குடும்ப அங்கத்தினர்கள் ஹாஜியாரின் விளக்கத்தில் திருப்தியுற்றனர்.
குறுக்கே வந்து நின்று, ""இனிமே நாம குர்பானி குடுக்க நிறைய, நிறைய முடி உள்ள ஆடு வாங்கணும்... இல்ல நானா?'' என்றான் முஸ்தபா; அனை வரும் சிரித்தனர்.












No comments:

Post a Comment