Monday, February 28, 2011

குலதெய்வ வழிபாட்டால் குழந்தை பிறக்குமா?


 குலதெய்வ வழிபாட்டால் குழந்தை பிறக்குமா? குல தேவதா, இஷ்ட குல தேவதா என்று இரண்டு வழிபாடு உண்டு. குலதெய்வம் என்பது உங்களுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அதற்கு நீங்கள் சென்றே ஆகவேண்டும். இஷ்ட குல தேவதை என்பது, எனக்கு மிகவும் பிடிக்கும். அய்யப்பன் கோயிலுக்குப் போவது பிடிக்கிறது. எனக்கு என்னவோ அந்தப் பாட்டெல்லாம் பிடிக்கிறது. இப்படி இஷ்டத்திற்குப் போவது. இது அவரவர்கள் விருப்பத்திற்கு தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் குலதெய்வம் என்பது கட்டாயம்.
குலதெய்வம் என்பது தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருந்து நம்மை முதன்மைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய நலன்களில் அக்கறை செலுத்தக்கூடியது.
எவ்வளவோ பேர் எங்கெங்கோ போய் வருகிறார்கள். காசிக்கு ஒருவர் போய்விட்டு வந்தார். அவருடைய கனவில் வந்து, ஏண்டா நான் இங்கே உட்கார்ந்துக் கொண்டு இருக்கிறேன். மூன்று வருடமா என்னை வந்துப் பார்க்காமல் எவ்வளவோ செலவு செய்து கொண்டு அங்கெல்லாம் போய்விட்டு வருகிறாயா? என்னை நீ பார்க்காமல் போன பிறகு உனக்கு காசி போனால் பலன் கிடைக்குமா? என்று கனவில் வந்து கேட்டிருக்கிறது. பிறகு ஓடிப் போய் வணங்கினார்.
வசதி வாய்ப்பு இழந்தவர்களும் பெரிய கோபுரங்கள் உள்ள கோயில் தெய்வங்களை குலதெய்வம் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
அப்படியில்லை, முன்னோர்கள் கூடி கூடி வழிபட்ட அந்த இடத்திற்கென்று ஒரு சக்தி இருக்கிறது. இன்றைக்கு நாம் சொல்லவில்லையா? காந்தி நின்ற இடம், வ.உ.சி. செக்கிழுத்த இடம் என்று எவ்வளவு பெருமையாகச் சொல்கிறோம். அதுபோல நம் முன்னோர்களும் நமக்குத் தலைவர்கள் மாதிரிதானே. அவர்கள் நின்று வழிபட்ட இடம். அவர்கள் பொங்கல் வைத்தது. அதெல்லாம் நாம் மதிக்க வேண்டாமா? அதனால் குலதெய்வத்திற்கு சக்தி உண்டு. குலதெய்வம் என்பது என்ன? தேவைகளை உணர்ந்து நமக்கு உடனடியாக தரக்கூடியதுதான் குலதெய்வம். மற்ற தெய்வங்கள் எல்லாம் வேண்டித்தான் கூப்பிட வேண்டும். இவர்கள் வேண்டினாலும், வேண்டாவிட்டாலும் நம்மிடம் வந்து நமக்கு நல்லது செய்யக்கூடிய தெய்வம். அதனால், குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம். குலதெய்வ வழிபாட்டால் குழந்தை பாக்கியம் உட்பட எல்லாம் நமக்கு கிடைக்கும்.

No comments:

Post a Comment