Tuesday, March 1, 2011

மணமகனுக்கு மணமகளை விட வயது குறைவாக இருப்பது ஏற்கத்தக்கதா?

மணமகனுக்கு மணமகளை விட வயது குறைவாக இருப்பது ஏற்கத்தக்கதா? இதற்கு சில பாடல்கள் எல்லாம் உண்டு. ஏழாம் அதிபதி சனியின் பார்வை பெற்று, 7ம் இடத்தில் பாவ கிரகம் இருந்தால் தன்னை விட வயதில் மூத்த பெண்ணை மணப்பான் என்று சொல்லப்பட்டுள்ளது.
மாடு, ஆடு, பெண்டிர், மனைவி, மக்கள் அவனவன் கிரக விதி என்றும் ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது. எனவே இதில் எந்த தவறும் இல்லை என்று சொல்லியிருக்கிறோம். எவருக்குமே என்ன விதிக்கப்பட்டுள்ளதோ அதுதான் கிடைக்கும். இதைத்தான் உதிக்கும் போது விதிக்கப்பட்டது என்று சொல்லுகிறோம்.
அதனால் பொதுவாக சனி ஏழாம் இடத்தில் இருந்தாலோ, சனி ஏழாம் இடத்தைப் பார்த்தாலோ தன்னை விட வயதில் மூத்த பெண் அல்லது பார்ப்பதற்கு விகாரமான தோற்றம் கொண்ட பெண்ணை மணமுடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. 7க்கு உரியவர் சனியுடன் சேர்ந்தாலும் இதுபோன்று ஏற்படும்.
கும்ப லக்னம் ஏழாம் வீட்டிற்குரியவன் சூரியன். அந்த சூரியனுடன் சனி சேர்ந்து ஏழாம் இடத்தையும் சனி பார்த்தால் வயதில் மூத்த பெண்ணை மணம் முடிப்பார்கள். அதில் தவறு இல்லை.
சமீபத்தில் ஒரு தம்பதியினர் தனது மகனுக்கு ஜாதகப் பொருத்தம் பார்க்க கொண்டு வந்தனர். பெண்ணுக்கும், பையனுக்கும் பொருத்தம் இருந்தது. சரி திருமணத்தை நடத்துங்கள் என்று கூறினேன்.
ஆனால் அந்த பெண்ணுக்கு பையனை விட 2 வயது கூடுதல். அதனை பெற்றோர் சுட்டிக் காட்டினார்கள். ஆனால், அந்த பையனுக்கு சனி ஏழாம் இடத்தில் இருப்பதால் எப்படிப் பார்த்தாலும் அவனுக்கு வயதில் மூத்த பெண்ணுடன்தான் திருமணம் நடைபெறும் என்று கூறி அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தேன்.

மேலும் அந்த பெண்ணின் நட்சத்திரமும் நல்ல நட்சத்திரமாக இருந்தது. இதனால் அந்தப் பெண்ணைப் பார்த்தால் வயதில் மூத்தவர் போலத் தெரியாது என்று சொன்னதற்கு அவர்களும் அதனை ஒத்துக் கொண்டார்கள்.
சில நட்சத்திரங்கள் இருக்கின்றன. அதாவது ரேவதி, கேட்டை, விசாகம், ரோகிணி நட்சத்திரப் பிள்ளைகள், பெண்கள் பார்த்தால் இளமையாகவே இருப்பார்கள். வயதானதே தெரியாது. இதெல்லாம் யெளவன நட்சத்திரங்கள் ஆகும். 28 வயதானவர்களைப் பார்த்தால் 23 வயதானவர் போல இருப்பார்கள். எனவே அந்த மாதிரி அமைப்பு இருப்பவர்களுக்கு அப்படித்தான் ஆகும். இதில் தவறு இல்லை.

2 comments:

  1. என்னுடைய பிறந்த தேதி 04-03-1985.நான் ஜூன் பிறகு திருமணம் செய்யலாம் என்று இருக்கிறேன் அனால் எனது வயது 27 முடிகிறது.28 வயதில் திருமணம் செய்யலாமா? இதறுகு பதில் தாருங்கள் நன்றி.

    ReplyDelete
  2. ஐயா நான் காதல் திருமணம் செய்து கொண்டேன்.என் மனைவி முஸ்லீம்.நான மிதுனம் ராசி புனர்பூசம். மனைவி கும்பம் ராசி பூரட்டாதி.பொருத்தம் பார்த்தால் ரஜ்ஜு பொருத்தம் இல்லை நான் இப்பொழுது என்ன செய்வது.

    ReplyDelete