Monday, February 7, 2011

பட்டினத்தார் அமுத மொழிகள்

பட்டினத்தார் அமுத மொழிகள்
மலரில் உள்ள தேனை மட்டுமே தேனீ அருந்தும். சாதாரண

ஈயோ பேதமில்லாமல் எதிலும் அமரும் சுபாவம் கொண்டது.

அதுபோல நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் நல்ல செயல்களை

மட்டுமே செய்வார்கள்.

ஒரு பொருளை நாம் விரும்பத் தொடங்கும்போதே, அதை

ஒருநாள் வெறுக்கவும் வேண்டிவரும் என்ற உண்மையை நாம்

உணர்வதில்லை. ஆனால், விரும்பும்போதே வெறுக்கவும் தெரிந்து

கொண்டவர்கள் வீணான மனவருத்தங்களுக்கு ஆளாக

நேர்வதில்லை.

ஆத்திரம் என்பது உள்ளத்தில் எழும்போது, அறிவு தன்னை

திரையிட்டுக் கொள்ளும். ஆத்திரம் கொண்டவன் தன் ஆத்திரத்தை

தீர்த்துக் கொள்வதை தடுப்பது என்பது அவ்வளவு எளிதான

செயல் அல்ல.

ஆத்திரம் கொண்டவன் செய்யக் கூடாத செயல்களை புத்தியின்றி

செய்ய தலைப்படுவான். அதனால், வாழ்நாள் முழுவதும் தான்

செய்த பழிச்செயலை எண்ணி வருந்துவான். அதனால்,

ஆத்திரத்தை விடுத்து சாந்த குணத்தை பின்பற்றுங்கள்.

தீயகுணம் கொண்டவர்கள் இறந்ததும் மீண்டும் இம்மண்ணில்

உடனே பிறந்து விடுவார்கள். இறைவன் அம்மனிதர்களின் பாவ

விமோசனத்திற்காக உடனே திருப்பி அனுப்பி விடுகிறான்.

வாழும் காலத்தில் நன்மையை செய்பவனே முக்தி அடைய

தகுதியானவன்.

No comments:

Post a Comment