Wednesday, February 2, 2011

பித்ரு தோஷம் என்றால் என்ன?








பிதுர்தோஷமும் பரிகாரங்களும்
உங்கள் பிறந்த ஜாதகத்தில் நிற்கும் ராகு கேதுக்கள் இந்த கலிகாலத்தில் பிதுர்தோஷத்துடன் பிறக்க வைக்கின்றன.இந்த பிதுர்தோஷம், நாம் முற்பிறவியில் செய்த பாவங்களின் விளைவுகளை அனுபவிப்பதற்காகவே குறிப்பிட்ட இடங்களில் நிற்கும்போது நம்மைப் பிறக்க வைக்கின்றன.
உங்கள் பிறந்த ஜாதகத்தில், லக்னத்துக்கு 1, 5, 7, 9 முதலான இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால் நீங்கள் பிதுர்தோஷத்துடன் பிறந்துள்ளதாக அர்த்தம்.இந்த பிதுர்தோஷம், நாம் முற்பிறவியில் நமது கணவன் அல்லது மனைவியை கவனிக்காமல் இருந்ததையும், நமது அப்பா அம்மாவை பாடாய் படுத்தியதையும், நமது மகனை அவனது மனைவியுடன் பிரித்துவைத்ததையும், அல்லது நமது மகளை அவளது கணவனுடன் பிரித்துவைத்ததையும், நமது வறிய சகோதரனை அவன் கெஞ்சிக்கேட்டும் அவனுக்கு அவசர உதவிகூட செய்யாமல் பணத்திமிர்,அதிகாரத்திமிரில் இருந்ததையும் காட்டுகிறது.
இந்த பிதுர்தோஷம், ஜாதகப்படி உங்களுக்கு 25 வயதில் கிடைக்க வேண்டிய அரசாங்க வேலையை 35 வயதில் (மிகத் தாமதமாக) கிடைக்கச் செய்யும். அல்லது 21 வயதில் செய்யவேண்டிய திருமணத்தை 31 வயதுக்கு மேல் செய்யுமளவுக்கு உக்கிரமாக செயல்பட வைக்கிறது.மனைவி,பெற்றோர்,குழந்தைகள்,உறவினர்களிடையே பிரச்னைகளை தீராமல் வளர்க்கக் காரணமாகிறது.
இந்தப்பிறவியில் கூட கடவுளை கேலி செய்பவர்கள்,பிற மதத்தை நிந்தனை செய்பவர்கள் இந்த பிதுர்தோஷத்தை அடுத்த பிறவியில் அனுபவிப்பார்கள்.
பித்ரு தோஷம் ஒருவரது/ஒருத்தியின் பிறந்த ஜாதகத்தில் அமைந்துவிட்டால், மற்றக்கிரகங்களுக்கு என்ன பரிகாரம் செய்தாலும் பலன் கிடைக்காது.பித்ரு தோஷம் நீக்கியப்பிறகுதான் பலன்கள் தரத் துவங்குகின்றன.
ஊரை அடித்து உலையில் போடுமளவுக்கு பணத்தாசை பிடித்து அலைபவர்கள் செய்யும் பாவங்கள் இந்தப்பிறவியிலேயே அவர்களின் மூத்த பிள்ளை (அது பெண்ணாக இருந்தாலும்)யை அல்லது கடைசிப் பிள்ளையைக் கடுமையாகப் பாதிக்கின்றது என்பதை நேரடியாக பலமுறை நான் உணர்ந்திருக்கிறேன்.அரசியலில் இருப்போர்,தேர்தலில் ஜெயித்தவர்கள்,மாநில மத்திய அரசுப் பணியில் இருப்போர்,அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள் எடுப்போர், பலரது தலையெழுத்தையே மாற்றும் அதிகாரத்தில் இருப்போர்கள் மனிதத் தன்மையின்றி செயல்படுவதால்(துட்டடிக்கும் நோக்கிலேயே கொள்கைகளை வகுப்பதால்) அவர்களுக்கு உடனுக்குடன் பாதிப்பை அவர்களும் அவர்களின் சந்ததிகளும் அனுபவித்துவருகின்றனர்.இவை மிகவும் கடுமையான பித்ரு தோஷத்தை உருவாக்குகின்றன.கலியுகத்தில்தான் நம்முடைய வாழ்க்கையைக் கண்காணிக்கும் அஷ்டதிக் பாலகர்கள் ரொம்ப பிஸி!!!

பிதுர் தோஷம் நீக்கிட உரிய ஜாதகர்கள் இராமேஸ்வரம் செல்ல வேண்டும்.அங்கு வேதம் அறிந்த பண்டிதர்களால் திலா ஹோமம் அல்லது துலா ஹோமம் செய்ய வேண்டும். நெல்லையும் எள்ளையும் கலந்து செய்யப்படும் ஹோமம் ஆகும்.காலையில் எள் நீரால் தர்ப்பணத்தை கடற்கரையினில் கொடுத்துவிட்டு பின்னரே திலா ஹோமம் செய்ய வேண்டும்.

திலா ஹோமம் செய்பவர்கள் அன்று இராமேஸ்வரத்தில் தங்க வேண்டும்.ஹோமம் முடிந்ததும் புறப்பட்டு அன்றே தமது ஊருக்குப் போகக்கூடாது.சிரத்தையுடனும்,முழு மனதுடனும்,ஆர்வத்துடனும் செய்ய வேண்டும். திலா ஹோமம் செய்து பிண்டத்தைக் கடல் நீரில் கரைக்கும்போது கருடபகவான் அங்கே அந்த நேரத்தில் வானில் வட்டமிட வேண்டும்.அப்படி வட்டமிட்டால் மகாவிஷ்ணு நம்மை இந்த செயல் செய்தமைக்கு ஆசிர்வதித்தாக அர்த்தம். திலா ஹோமம் செய்ய விரும்புபவர்கள் எனக்குத் தெரிந்த ஒரு வேதியரையும் அணுகலாம்.
வைஷ்ணவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் திருப்புல்லாணிக்கரையில் திலா ஹோமம் செய்ய வேண்டும்.கேரளாவில் திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள பரசுராம க்ஷேத்திரம் என்ற கிராமத்தில் பிண்டம் கொடுத்து பிதுர்சாந்தி எனப்படும் திலா ஹோமம் செய்ய வேண்டும்.

கேரளாவில் பித்ரு தோஷம் நீங்கிட பசுவுக்கு அவரவர் ஜன்ம நட்சத்திரத்தன்று பருத்திக்கொட்டைப்பால் எடுத்து வெல்லம் கலந்து பித்ருக்களை வேண்டி உண்பதற்குக் கொடுத்துவருகின்றனர்.(நாமும் இப்படிச் செய்யலாம்)
வாழ்வில் ஒருமுறையாவது காசி,கயா மற்றும் இராமேஸ்வரம் சென்று ஹோமம் செய்ய வேண்டும்.வயதில் மூத்தவர்களுக்கு உரிய மரியாதை கொடுங்கள்

பித்ரு தோஷம் என்றால் என்ன?
நம்மோடு வாழ்ந்து மறைந்தவர்களில் சிலர், தங்களது வினைப்பயன் காரணமாக உடல் கிடைக்காமல், அடுத்த பிறவி எடுக்க முடியாமல் தவித்துக்கொண்டிருப்பார்கள். உடல் இல்லையென்றாலும் மனதின் தாக்கத்தால் பசி, தூக்கம் என்று நாம் அனுபவிக்கும் எல்லா அவஸ்தைகளையும் அனுபவித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்களுடைய வாரிசு மற்றும் உறவினர்களான, அவர்களுடைய இந்தப் பசியைப் போக்கக் கடமைப்பட்டவர்களான நாம் அதைச் செய்யாமல் விடும் போது அது நமக்கு சாபமாக வந்து சேருகிறது. இதனையே ‘பித்ரு தோஷம்’ என்றும், ’பித்ரு சாபம்’ என்றும் கூறுகின்றனர். இதனை நிவர்த்திக்க இறந்தவர்களின் நினைவு நாளில் அன்னதானம் போன்ற நற்கருமங்களைச் செய்வதுடன், அதன் புண்ணிய பலன் அனைத்தும் இறந்த நம் முன்னோர்களுக்கே செல்ல வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். அவர்களின் நினைவாக ஆலயங்களில் தீபமேற்றுவது இறந்தவர்களுக்கு மேலும் மேலும் நன்மையைத் தரக் கூடியதாகும்.






No comments:

Post a Comment