Monday, February 28, 2011

அத்திக்காயின் சிறப்புகள் என்ன?

அத்திக்காயின் சிறப்புகள் என்ன?

கண்டு காய் காய்க்கும்; காணாமல் பூ பூக்கும் என்பது அத்திக்காய் பற்றிய பழமொழி. அத்திக் காய்க்கு உள்ள துவர்ப்பு சக்தி காரணமாக சித்த வைத்தியத்தில் அது பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
உணவுப் பொருட்களில் வாழைப்பூ உள்ளிட்ட சில பொருட்கள் தவிர துவர்ப்பு சுவையுள்ள பதார்த்தங்களை சேர்த்துக் கொள்ள மாட்டோம். ஆனால் துவர்ப்பு சுவைக்கு ரத்த சுத்திகரிப்பு, நரம்புகளை சிறப்பாக இயங்க வைப்பது உள்ளிட்ட சக்தி உள்ளது. அத்திக்காயை பொறியல் செய்து சாப்பிடுவதும் நல்ல பலன் அளிக்கும்.
அதர்வண வேதத்தில் அத்திக்காய் அப்பத்தை யாகத்தில் இடும் போது அதீத பலன் கிடைக்கும். அத்திக்காயை மாமிசத்திற்கு இணையான, மிக வலிமையான பொருளாக அதர்வண வேதம் கூறுகிறது. இரும்புச் சத்து குறைபாடு உள்ளவர்கள் அத்திக்காயை சாப்பிடுவதன் மூலம் நலம் பெறலாம்.
வீடுகளில் தோஷம் ஏற்பட்டாலும், வீட்டின் பின்புறம் தென்திசையில் அத்திக்காய் மரத்தை வளர்த்தால் பலனளிக்கும். தியானம் செய்யப் பயன்படுத்தப்படும் ஆசனங்களை (அமரும் பலகை) அத்தி மரத்தில் செய்வதன் மூலம் தியானத்தின் சக்தியும், மன ஒருமுகத்தன்மையும் அதிகரிக்கும். அத்தி மரத்திற்கு அந்த சக்தி உள்ளது.
தினசரி சாப்பிட முடியாவிட்டாலும், மாதத்திற்கு ஒருமுறையாவது அத்திகாயை உணவில் சேர்த்துக் கொள்வது உடல்நலத்திற்கு ஏற்றது. கார்த்திகை நட்சத்திரத்திற்கு உரிய விருட்சம் அத்திமரம்.
பழங்காலத்தில் தாயம் விளையாடப் பயன்படும் பலகைகள், தாயக்கட்டைகளை அத்தி மரத்தில் செய்ததாக நூல்கள் கூறுகின்றன. மேலும் அதனை தெய்வப் பொருளாகவும் அதனைப் பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. முருகனுடைய அம்சமாகவும் அத்தி மரம் கருதப்படுகிறது.
சங்க காலத்தில் ஆயுதப் பிரயோகத்திலும் அத்தி மரம் இடம்பெற்றுள்ளது. அத்தி மரத்தில் குத்திப் பார்க்க வேண்டும் என்பது போன்ற பழமொழிகளும் பிரசித்தம். போர்ப் பயிற்சி பெறும் மாணவர்களின் அம்பு எய்யும் திறன், வாள்வீசும் திறன் ஆகியவற்றை அறியை அத்தி மரம் பயன்படுத்தப்பட்டதாகவும் சான்றுகள் இருக்கின்றன. அத்தி மிக உறுதியான மரம் என்பதால் இது போன்ற பயிற்சிகளுக்கும் உதவியது.

No comments:

Post a Comment