Tuesday, February 1, 2011

எண்ணெய் குளியல்

எண்ணெய் குளியல்

உடல் தூய்மைக்கும், இதய தூய்மைக்கும் எண்ணெய் குளியல் மிக முக்கியமானதாக மூதாதயர் இதை கடை பிடித்தனர். நம் நாட்டில் காலைக் கடைமைகளில் எண்ணெய் குளியல் முக்கியமானதாக கருதபடுகிறது.
அடி முதல் பாதம் நன்றாக எண்ணெய் தேய்த்து குளிப்பது நம் உடலில் குளிர்ச்சியடைவதும் மனதும் சுத்தமடைவதாக நம் முன்னோர்கள் கருதினர். எண்ணெய் தேய்த்து குளிப்பதால் இரண்டு விஷயங்கள் பெரும் பயனளிக்கின்றன.
ஒன்று எண்ணெயில் சேர்க்கப்படும் மூலகைகளில் மருத்துவ குணங்கள் உடலில் பரவுகின்றது.
இரண்டாவது சருமத்தின் மேல் பரப்பில் வாழும் கண்ணுக்கு தெரியாத நோயணுக்கள், எண்ணெய் பூசியதும் வாயு கிடைக்காமல் இறந்து போகின்றன.
விரத நாட்கள்,நோன்பு நாட்கள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். தலைமூழ்கிக் குளித்த பின் உடலில் எண்ணெய் பூசக்கூடாது.
தலைமூழ்கிக் குளித்த பின் எண்ணெய் தேய்த்தால் தூசி அழுக்கு போன்றவை உடம்பில் படிந்து விடுவதுடன் உடலுக்குள் இருக்கும் மாசுகள் வியர்த்து வெளியேறாததனால் வேலைப்பழு அதிகரிக்கும் தலையில் தோய்க்கும் எல்லா எண்ணெய்களையும் உடலில் தேய்க்கலாம்.
ஆனால் உடலில் தேய்க்கும் எண்ணெய்களை எல்லாம் தலைக்கு தேய்க்க கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். முடிகொட்டுதல், இளம்நரை என்பதை தவிர்க்க தலையில் எல்லா எண்ணெய்களையும் தேய்ப்பதை தவிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment