Tuesday, February 8, 2011

அமைதி தரும் உண்ணாவிரதம்

அமைதி தரும் உண்ணாவிரதம்

* உண்ணாவிரதம் என்பது இன்று நேற்று உண்டான சாதனமன்று. ஆதிபுருஷன் என கருதப்படும் ஆதாம் காலத்திலிருந்தே அனுஷ்டிக்கப்பட்டு வருவது. அது தன்னைத் தானே தூய்மைப்படுத்திக் கொள்வதற்கு பயன்பட்டிருக்கிறது. நல்ல லட்சியங்களோ, தீய லட்சியங்களோ அவைகளை அடைவதற்கு பயன்பட்டிருக்கிறது.
* உண்ணாவிரதம் என்பது அகிம்சை என்னும் ஆயுத சாலையில் உள்ள ஆயுதங்களில் மிகவும் வலிமை வாய்ந்த ஆயுதமாகும். அதை வெகு சிலரே உபயோகிக்க முடியும் என்பதால் அதை உபயோகிக்கவே கூடாது என்று ஆட்சேபிக்க முடியாது.
* உண்ணாவிரதமெனும் ஆயுதத்தை உபயோகிப்பதற்குச் சரீரபலம் மட்டும் போதாது. சத்தியாக்கிரக கடவுளிடத்தில் அசாத்திய நம்பிக்கை தேவைப்படும்.
* நான் அனுஷ்டித்த உண்ணாவிரதங்களில் எதுவும் பலன் தராமல் போனதாக எனக்கு ஞாபகமில்லை. அப்படி நான் உண்ணாவிரதம் அனுஷ்டித்த காலத்திலெல்லாம் அதிக உன்னதமான அமைதியும், அளவற்ற ஆனந்தமுமே அடைந்தேன்.
* அதிக பலனுள்ள சில மருந்துகளைப் போல உண்ணாவிரதமும் அபூர்வமான சந்தர்ப்பங்களிலும், அதில் திறமையுடைவர்களின் மேற்பார்வையிலும் தான் உபயோகிக்கக் கூடியதாகும்.
* உண்ணாவிரதத்தை உபயோகிக்கும் வித்தையில் திறமை உள்ளவன் உபயோகித்தாலன்றி அது பலாத்காரமாகவே ஆகிவிடக்கூடும்.
* ஆண்டவன் அருளால் ஏற்படாத உண்ணாவிரதங்கள் அனைத்தும் பயனற்ற வெறும் பட்டினியைவிடக் கூடக் கேவலமானதே ஆகும்.
* உண்ணாவிரதத்தால் ஏதேனும் நன்மை ஏற்படக் கூடியதாயிருந்தாலும், அடிக்கடி நிகழ்த்தி வந்தால் எந்த நன்மையும் ஏற்படாமல் போகும். இறுதியில் ஏளனமே மிச்சமாகும்.

No comments:

Post a Comment