Sunday, March 6, 2011

அமாவாசையில் பிறந்தால் திருடர்களாக இருப்பார்களா?

அமாவாசையில் பிறந்தால் திருடர்களாக இருப்பார்களா?

அமாவாசையில் பிறந்தால் அவர்கள் திருடனாக இருப்பார்கள் என்று பலரும் கூறக் கேட்டிருக்கிறோம். அதெல்லாம் உண்மையா?
சாதாரணமாக ஆத்மகாரகன் சூரியன், மனோகாரன் சந்திரன் இவ்விரண்டும் சந்திக்கும் நாள் அமாவாசை ஆகும். எனவே அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளுக்கு அதிக திறமை இருக்கும். அமாவாசை ‌தித‌ி‌யிலு‌ம், பெளர்ணமி திதியிலும்தான் ஒன்பது கிரகங்களும் வலுவடைகின்றன.
திதி செளம்ய தோஷம் என்று ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகிறது. அதாவது, குறிப்பிட்ட திதியில் பிறந்தால் அன்றைய தினம் ஒரு சில கிரகங்கள் வலுவிழக்கும். அதுதான் திதி செளம்ய தோஷம். ஆனால் அமாவாசை மற்றும் பெளர்ணமி திதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு எ‌ந்த ‌தி‌தி செ‌ள‌ம்ய தோஷமும் இருக்காது.அதாவது துதியை திதியன்று தனுசு, மீனம் வலுவிழக்கும், பிரதமை திதியன்று துலாம், மரகம் வலுவிழக்கும், சதுர்த்தி திதியன்று கும்பம், ரிஷபம் வலுவிழக்கும். ஆனால் பெளர்ணமி, அமாவாசை திதியில் எல்லா கிரகங்களும் வலுவடைவதால் அவர்களுக்கு எந்த செளம்ய தோஷமும் கிடையாது.அதனால் இவர்களுக்கு மூளை பலம் அ‌திக‌ம். வாய்ப்புகளுக்காக காத்திருக்காமல், வாய்ப்புகளை அவ‌ர்களே உருவாக்குவார்கள். அதற்காக சில தவறுகளை அவர்கள் அறியாம‌ல் செய்வார்கள்.
சுயநலக்காரர்களாக இருக்க மாட்டார்கள்... திறமைசாலிகளாக இருப்பார்கள், அவ‌ர்களது ‌திறமையை மற்றவர்கள் அங்கீகரிக்க மாட்டார்கள், அதற்காக வெறுத்து அவர்கள் தங்களைத் தாங்களே தலைவனாகவோ அரசனாகவோ பிரகடனப்படுத்திக் கொள்வர். அதனா‌ல் அவர்களை தலைக் கனம் பிடித்தவ‌ர்கள் என்று கூறுவர். அவர்களுடன் இருப்பவர்களுக்கு மட்டுமே அவ‌ர்களது த‌ந்‌திர‌ம் தெரியும். சில சமயங்களில் அமாவாசை‌யி‌ல் ‌பிற‌ந்தவ‌ர்க‌ள் செ‌ய்யு‌ம் த‌ந்‌திர‌ங்க‌ள் அவ‌ர்களுட‌ன் இரு‌ப்ப‌வ‌ர்களு‌க்கே பு‌ரியாது. 2002ல் பேசியதற்கு 2005ல் தான் மற்றவர்களுக்கு விவரம் பு‌ரியு‌ம். அமாவாசையி‌ல் ‌பிற‌ந்தவ‌ர்க‌ள் ஏதாவது ஒரு மன வறுத்தத்திலேயே இருப்பார்கள், ஒரு தேடல் இருக்கும். இருப்பதை வைத்துக் கொண்டு திருப்தி அடைய மாட்டார்கள். ஒரு விதமான மன உளைச்சலுடன் இருப்பார்கள். ஏனெனில் அமாவாசையன்று சந்திரன் வலுவிழப்பதுதான். சந்திரன் மனோகாரகன் என்பதால் எப்போதும் ஒருவித மன சஞ்சலத்திலேயே இருப்பார்கள். சாதித்துவிட்ட பின்னரும் இன்னமும் சாதிக்கவில்லை சாதிக்கவில்லை என்றே மன உளைச்சலில் இருப்பர்.
அமாவாசையில் பிறந்தவர்கள் நிச்சயம் திருடுபவர்கள்தான். ஆனால் பொருட்களை அல்ல, மனதைத் திருடுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். அமாவாசையில் பிறந்தவர்கள் அறிவியல் திருடர்கள், அவ‌ர்க‌ள் எடு‌த்த முடிவை மா‌ற்‌றி‌க்கொ‌ள்ள மா‌ட்டா‌ர்க‌ள், முடிவு எடு‌த்தா‌ல் எடு‌த்ததுதா‌ன்.
நல்ல வாழ்க்கை துணை அமையும், ஆனாலு‌ம் இ‌ன்னு‌ம் ந‌ல்லவராக அமை‌ந்‌திரு‌க்கலாமே எ‌ன்று ‌எ‌ண்ணுவ‌ர். சாப்பிடும் வரை திருப்தி அடைவர், பிறகு குறை சொல்வார்கள். எல்லாவற்றிலும் திறன்பட செய்ய வேண்டும் என்று எண்ணுவார்கள். தாய் தந்தையை நேசிப்பவர்களாக இருப்பர்.
இறை நம்பிக்கை இருந்தால், அதி‌ல் அவ‌ர்கள் த‌ன்னை‌த் தானே இறை‌த் தூதனாக அ‌றி‌வி‌த்து‌க் கொ‌ள்ளுபவ‌ர்கள். அர‌சிய‌லி‌ல் தானைத் தலைவன், பஜாரில் இரு‌ந்தா‌ல் த‌னது கடையை முத‌லாக வை‌த்‌திரு‌ப்ப‌ர்.
பகலில் பிறந்தால் கொஞ்சம் கஞ்சம், இரவில் பிறந்தால் ஈகை குணம் மிக்கவர்களாகவும் இருப்பர். இது ஆரா‌ய்‌ச்‌சி‌‌யி‌ல் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டது, இத‌ற்கு ச‌ந்‌திர‌னி‌ன் ஆ‌தி‌க்கமே‌ காரண‌ம்.இறுக்கமான மன நிலை உடையவர்களாக இருப்பர், அழுதா‌ல் தேம்பித் தேம்பி அழுவர், அதுவும் குறைச்சல்தான். ‌அ‌தீத ப‌ற்றுடையவ‌ர். அடக்க முடியாமல் அதிகமான பற்று உடையவர், அதீத பற்று, யதார்த்தவாதி, மூடத்தனத்தை வெறுப்பவர், ஆறாவது அறிவுக்கு அதிக வேலை, தன்னைச் சுற்றி இருப்பவர்களை அதிகமாக வளருவதை விரும்பாதவர்கள். அ‌தி‌‌ல் அ‌திக அ‌க்கறை கா‌ட்டுவவார்கள். மரியாதையை விரும்பாதவர்களாக இருப்பது போன்று காட்டிக் கொள்பவர், ஆனால் அப்படி அவ‌ர்க‌ள் இரு‌க்க மா‌ட்டா‌ர்க‌ள். எதை அதிகம் விரும்புகிறார்களோ அதனை வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள்.இதில் இரவில் பிறந்தால் வித்தியாசமாக இரு‌ப்ப‌ர். ம‌ற்றவ‌ர்களு‌க்கு சவால் விடுபவர், உணர்ச்சி வய‌ப்படுபவ‌ராக இரு‌ப்ப‌ர். பகலில் பிறந்தவர்களாக இருந்தால் மனதிற்குள்ளேயே சவா‌ல் விடுபவராக இரு‌ப்ப‌ர்.
அமாவாசையில் பிறந்தவர்களுக்கு பில்லி சூன்யம் வைக்க முடியாது, எந்த மாந்‌த்ரீகமும் அவர்களை ஒன்றும் செய்யாது. மேலும், ஒவ்வொரு மாத அமாவாசையைப் பொறுத்து அவர்களின் குணாதிசயம் அமையும். அதாவது,
சித்திரை மாத அமாவாசையில் பிறந்தவர்கள் நல்ல குணமுடையவர்களாகவும், ஆணி மாதத்தில் பிறந்தவர்களுக்கு கொடுக்கும் குணமும், ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் அப்பாவியாகவும், படைப்பாற்றல் மிக்கவர்களாகவும் இருப்பர்.ஆவணி மாதத்தில் (அமாவாசையில்) பிறந்தவர்கள் ராஜ தந்திரிகளாகவும், உள்ளூணர்வு மிக்கவர்களாகவும், புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் ஆராய்ச்சியில் ஆர்வம் மிக்கவர்களாகவும், ஐப்பசியில் பிறந்திரொந்தால் ஓயாத மனப் போராட்டம் கொண்டவர்களாக இருந்தாலும் மற்றவர்களுக்கு வழி காட்டுபவர்களாக இருப்பார்கள். கார்த்திகையில் பிறந்திருந்தால் நாடாளுபவர்களாகவும், நாடாளுபவர்களின் நட்பு பெற்றவர்களாகவும், ஆவணங்களை உருவாக்குவதில் கை தேர்ந்தவர்களாகவும், மார்கழியில் பிறந்தவர்கள் துறவிகள் போன்றும் இருப்பர். 40 வயதிலேயே முதிர்ச்சி அடைந்துவிடுவர். தை மாதத்தில் பிறந்தால் சுற்றத்தாரை விரும்புவராகவும், பங்குனி மாதத்தில் பிறந்தவர்கள் திறமைசாலிகளாகவும், வைகாசி மாதத்தில் பிறந்தவர்கள் கெட்ட குணங்களைக் கொண்டும் இருப்பார்கள்.
ஆனால், மாசி மாதத்தில் பிறந்தவர்கள் சோபிக்க மாட்டார்கள். அவர்களுக்கு வாழ்க்கைத் துணை சரியாக அமையவில்லை என்றால் வாழக்கை அவ்வளவுதான், அவர்களது வாழ்க்கைத் துணையைப் பொறுத்தே அவர்களது வாழ்க்கை அமையும்.

1 comment: