Sunday, March 6, 2011

செவ்வாய் (அங்காரக) தோஷம்!

செவ்வாய் (அங்காரக) தோஷம்!

இலக்னம், சந்திரன், சுக்கிரன் ஆகியவற்றிற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் தோஷ ஜாதகமாகக் கொள்ள வேண்டும். இவை மட்டுமின்றி லக்னத்தில் செவ்வாய் இருந்தாலும் தோஷத்தையே ஏற்படுத்தும்.லக்னம் மேஷ, விருட்சிக, மகரமானால் தோஷமில்லை. செவ்வாயுடன் குரு, சனி, சூரியன் சேர்க்கையோ பார்வையோ இருந்தால் தோஷ நிவர்த்தியாகும். செவ்வாயுடன் குரு சேர்க்கை யோக பலனைத் தரும் (குரு மங்கள யோகம்). செவ்வாய் தோஷம் என்பது இருக்கக் கூடாத ஒன்றும் அல்ல. அதற்காக பயம் கொள்வது அர்த்தமற்றது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதற்கு பொருத்தமான தோஷமுள்ள ஜாதகத்தை தேடி விவாகம் செய்வது போதுமானது. ஒருவன் பிறந்த போதே விதி நிர்ணயமாகிவிடுவதால் அவனை தோஷங்கள் ஒன்றும் செய்யாது. தோஷம் இல்லாதவர்களுக்கு இளம் வயதில் விவாகம் முடிந்து வாழ்வில் செட்டில் ஆகிவிடுவார்கள் என்று சொல்வதும் தவறு. வாழ்க்கையில் செட்டில் ஆன பின் விவாகம் செய்து கொள்பவர்களும் அதிகம் உண்டு. செவ்வாய் தன் உச்ச ஆட்சி வீடுகளில் இருந்தாலும் தோஷமில்லை.
அங்காரக தோஷம்
செவ்வாய் - புதன், சந்திரன் இவர்களின் சேர்க்கை பார்வை பெற்றாலும் தோஷமில்லை. செவ்வாய் ஒருவர் ஜாதகத்தில் சிம்மம் அல்லது கும்பத்தில் இருந்தாலும் பெரிய தோஷம் இல்லை. செவ்வாய் இருக்கும் ராசியின் அதிபதி 1, 4, 5, 7, 9, 10 ஆகிய இந்த ஸ்தானங்களிலிருந்தாலும் தோஷ நிவர்த்தி கிடைக்கும்.
பரிகாரம்
அங்காரக தோஷமுள்ளவர்கள் தஞ்சை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள அங்காரகனை 6 கிருத்திகை நட்சத்திர தினங்களில் சென்று வணங்கி வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம். சூரியனார் கோயிலுக்கு சென்றாலும் தோஷ நிவர்த்தி பெறலாம்

No comments:

Post a Comment