Sunday, March 6, 2011

பருவமடைவதை வை‌த்து ‌திருமண‌ப் பொரு‌த்த‌ம் பா‌ர்‌க்கலாமா?

 பருவமடைவதை வை‌த்து ‌திருமண‌ப் பொரு‌த்த‌ம் பா‌ர்‌க்கலாமா? ஆண்களுக்குப் பிறந்த தேதியை வைத்தும், பெண்களுக்கு பருவ மடைந்த நேரத்தை வைத்தும் சில ஜோதிடர்கள் திருமணப் பொருத்தம் பார்க்கிறார்கள். இது பற்றி விளக்க வேண்டும் என்று ஒரு வாசகர் ஒருவர் கேட்டிருக்கிறார்?
பெண்களுக்கு பூப்பெய்தும் காலம் தற்போது சராசரியாகப் பார்த்தீர்களென்றால் 10 முதல் 13 வயதிற்குள் இருக்கிறது. அவர்களுடைய ஜாதகத்தில் லக்னாபதி, ராசிநாதன் எல்லாம் சரியாக இருந்துவிட்டால் 10 முதல் 13 வயதிற்குள் பூப்பெய்துவிடுவார்கள். லக்னாபதி ராகு, கேது, சனியுடன் சேர்ந்து லக்னத்திலும் பாவ கிரகம் இருந்தாலும் 15 அல்லது 16 வயதாகும். சிலருக்கு எய்தாமலே கூட போகலாம். அதையெல்லாம் ஜாதகங்களைப் பார்ககும் போது கண்டுபிடிக்கலாம். பூப்பெய்தலில் ஆரம்பித்து ஏறக்குறைய 40 முதல் 45 வயதிற்குள் அந்தக் காலம் முடிவடைகிறது. எனவே இது இடையில் வந்து போகக்கூடிய ஒரு விஷயம். அதனால்தான் பூப்பெய்தலை வைத்து திருமணத்திற்கானப் பொருத்தங்களைப் பார்க்கக் கூடாது. பூப்பெய்தலை சாதாரணமாகப் பார்க்கலாம். அவர்களுடைய கர்ப்பப்பை எப்படி இருக்கிறது. உடலுறவு ஆர்வம் இருக்கிறதா? இல்லையா? என்பன போன்ற சில விஷயங்களுக்கு மட்டும் சாதாரணமாகப் பார்க்கலாம். முழுக்க முழுக்க பூப்பெய்தலை வைத்து பார்க்க முடியாது. பிறந்த ஜாதகத்தை வைத்துதான் எல்லாவற்றையுமே முடிவெடுக்க வேண்டும். சிலர் பிறந்த ஜாதகத்தை சரியாக எழுதுவதில்லை, கணிப்பதில்லை. அதனால் ருதுவானதை பெரிய விஷாவாகக் கொண்டாடினார்கள். பெண் திருமணத்திற்காகத் தயாராக இருப்பதை அறிவிப்பதற்காகவும் மஞ்சள் நீராட்டு விழா போன்றவற்றை செய்தார்கள். தற்பொழுது 4வது நாளே பெரும்பாலும் தலைக்கு தண்ணீர் ஊற்றி யூனிஃபார்மை போட்டு பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைத்துவிடுகிறார்கள். அதனால் பூப்பெய்துவதை வைத்து திருமணப் பொருத்தம் பார்க்கக் கூடவே கூடாது. அது சரியாக வராது. இதேபோல எண் ஜோதிடம் என்பதும் முழுமையான உணவு கிடையாது. அதுவும் ஊறுகாய் மாதிரிதான். ஒவ்வொரு எண்ணிற்கும் ஒவ்வொரு கிரகம் இருக்கிறது. அதை அடிப்படையாக வைத்துதான் பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு, 1, 10, 19, 28 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் 1ஆம் எண் ஆதிக்கத்தில் வருகிறார்கள். அந்த எண்ணிற்குரிய கிரகம் சூரியன். அது அவர்களுடைய ஜாதகத்தில் நன்றாக இருக்க வேண்டும். அதனை கட்டத்தைப் பார்த்துதான் அந்த எண்ணிற்குரிய கிரகம் நன்றாக இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
1, 10, 29, 28 ஆம் தேதிகளில் பிறந்து அதற்குரிய கிரகமான சூரியன் ஜாதகத்தில் நீச்சமாகி பகைக் கோள் சேர்க்கையுடன் இருந்தால் அவர்களுடைய பெயர் 1ஆம் எண்ணில் வரக்கூடாது. அவர்கள் 1ஆம் எண்ணிற்குரிய ராசிக் கல் ரத்தினம், மாணிக்கம் போன்றவற்றை அணியக்கூடாது. ஜாதகத்தில் நன்றாக இருக்கிறதா என்பதனைப் பார்க்க வேண்டும். அதனால் எண் ஜோதிடத்தை வைத்தே முழுக்க முழுக்க திருமணப் பொருத்தத்தைப் பார்ப்பது என்பது தோல்வியைத்தான் கொடுக்கும். பிரிதல், விவாரகரத்து போன்றெல்லாம் நிறைய பார்க்கிறோம்.
இதெல்லாம் நுனிப்புல் மேய்தல் போன்றதுதான். அதனால் இரண்டு இரண்டுமே மறுக்கப்படக்கூடிய விஷயம்

No comments:

Post a Comment