Tuesday, March 1, 2011

பசுவின் சாணம், கோமியம் உள்ளிட்டவற்றை சிறந்த கிருமி நாசினி என்று கூறுகிறார்களே?

பசுவின் சாணம், கோமியம் உள்ளிட்டவற்றை சிறந்த கிருமி நாசினி என்று கூறுகிறார்களே?

இந்து மதத்தைப் பொறுத்தவரை பசு தெய்வமாகவே வணங்கப்படுகிறது. பசுவின் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் தெய்வங்கள், தேவர்கள் இருப்பதாக கருதப்படுகிறது.
பசுவின் உடலில் உள்ள ஒவ்வொரு பாகமும் மனிதர்களுக்காகவே பயன்படுகிறது. உதாரணமாக தன் இரத்ததை அது பாலாக மாற்றித் தருகிறது. அதன் கொம்புகள் பல்வேறு பயன்பாடுகளுக்கும், அதன் தோல் மேளம் செய்வதற்கும் உதவுகிறது. தன்னலமற்றவர்களை உலகம் வணங்கும் என்பதற்கு பொருளாகவே பசுவை வணங்குவதை இந்து மதம் போதித்துள்ளது.
தாய்ப்பாலுக்கு இணையான மருத்துவ குணமும், புரதங்களும் பசும் பாலில்தான் உள்ளது. ஆட்டுப் பாலில் கூடுதலான புரதங்கள் இருப்பதாக அறிவியல் நிரூபித்தாலும், அது ஜீரணமாவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் பசும்பால் உடனடியாக செரிக்கும்.
இதிலும் காராம் பசு வகை சில ரக புற்களை மட்டுமே உணவாகக் கொள்ளும். சாதாரண வகை பசுவுக்கும், காராம் பசுவுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. புராணங்களில் கூறப்பட்டுள்ளது போல் இறைவனில் திருமேனி மீது தானாகவே பால் சுரக்கும் வகையைச் சேர்ந்தது காராம் பசுவே. பல கோயில்களின் ஸ்தல வரலாற்றில் இவை கூறப்பட்டிருக்கும்.
தெய்வத்தன்மை உடைய காராம் பசுவின் பால் சுவையும், மருத்துவ குணங்களும் உள்ளதாக இருக்கும். இதற்கு காரணம் மூலிகைகளுக்கு ஒத்த தன்மையுடைய புற்களை மட்டும அது உண்ணும். சந்தைகளில் விற்கப்படும் தீவனங்களை அது விரும்பாது உண்ணாது.
தவிடு, புண்ணாக்கு உள்ளிட்டவை கலந்த புளித்த நீரைக் கூட காரம் பசு குடிக்காது. இயற்கையாக கிடைக்கும் தண்ணீரைத்தான் அது குடிக்கும்.
இதன் காரணமாகவே அதன் சாணம் மருத்துவ குணம் மிக்கதாகத் திகழ்கிறது. இந்த சாணத்தை நிலத்தில் படாமல், அருகம்புல்லின் மேல் விழ வைத்து, அந்த அருகம்புல்லுடன் அதனை தீயிலிட்டு திருநீறு போல் ஆக்கி, அதனை பூசி வந்தால் தீராத நோயும் தீரும் என மருத்துவ நூல்கள் கூறுகின்றன.
இதேபோல் பசுவின் சிறுநீரும் (கோமியம்) மருத்துவ குணம் மிக்கதாகவே இருக்கிறது. இதன் காரணமாகவே கிரஹப் பிரவேசத்தின் போது வீட்டிற்குள் கோமியம் தெளிப்பதையும், பசுவை வீட்டைச் சுற்றில் வலம் வரை வைத்து அதனை வீட்டிலேயே சிறிநீர் கழிக்க வைப்பதையும் இந்து மதத்தினர் கடைப்பிடிக்கின்றனர். இதன் காரணமாக அந்த வீட்டிற்கு இறைவன் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை

No comments:

Post a Comment