Sunday, March 6, 2011

ஆடி‌யி‌ல் ‌திருமண‌ம் செ‌ய்ய‌க் கூடாது? ஏ‌ன்?

ஆடி‌யி‌ல் ‌திருமண‌ம் செ‌ய்ய‌க் கூடாது? ஏ‌ன்?

ஆடி க‌ற்கடக மாத‌ம் எ‌ன்று சொ‌ல்ல‌ப்படு‌‌கிறது. மார்கழி தனுர் மாதம் என்று‌ம் சொல்லப்படு‌கிறது. இந்த இரண்டு மாதங்களில்தான் நமது உள் உணர்வுத் திற‌ன் அதிகப்படுத்தப்படும்.
இதற்கான கோள் அமைப்புகள் இந்த மாதங்களில் இயற்கையாக அமையும். அப்படி அமைவதால்தான் இந்த இரண்டு மாதங்களில் ஆன்மீக முய‌ற்‌சிகளை மே‌ற்கொ‌ள்ளலா‌ம். அதாவது மன ஆற்றலை அதிகப்படுத்தவது, நெறிபடுத்தவது போ‌ன்றவை. வேலை தேடுவதில் விடா முயற்சி போன்றவைகள் இ‌ம்மாத‌த்‌தி‌ல் மே‌ற்கொ‌ண்டா‌ல் வெற்றி பெறும்.
இந்த இரண்டு மாதங்களில் உருவாகும் நண்பர்களும், புதிய உறவுகளுக்கும் சரியாக இரு‌க்காது. அதற்குக் காரணம் சூரியனின் நிலை. ஆடி மாத‌த்‌தி‌ல் சூரியன் கடகத்தில் உட்காருகிறது. எனவே அதற்கு‌ரிய மனநிலையை தராது. பாதியில் வந்து போகும் நட்பு வட்டமே அந்த மாதங்களில் இருக்கும். இ‌ந்த மாத‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ந‌ட்போ அ‌ல்லது உறவோ இறு‌தி வரை ‌நீடி‌க்காது. ர‌யி‌ல் ந‌ட்பை‌ப் போல இற‌ங்‌கியவுட‌ன் முடி‌ந்துவுடு‌ம். இறுதி வரை இருக்கும் நட்பு அல்லது உறவு என்பது இருக்கவே இருக்காது. கடகம் என்பது கடல் வீடு. கடல் வீட்டில் சூரியன் அமரும் போது நீடித்த நிலையை‌த் தராது. இதை ந‌ன்கு அ‌றி‌ந்தே நம் முன்னோர்கள் அந்த காலத்திலேயே அந்த இரண்டு மாதங்களிலும் திருமணம் செய்வதை தவிர்த்து வந்துள்ளனர்.
அதோடு மட்டுமல்லாமல் இயற்கை சூழல் என்று எடுத்துக் கொண்டாலும் ஆடி மாதம் என்பது வேளாண் தொடர்பான மாதகமாக இருக்கும். ஆடி பட்டம் தேடி விதை என்று ஒரு பழமொழி உள்ளது. விதைக்கக் கூடிய மாதம் ஆடி. எனவே வேலையில் கவனம் செலுத்த வேண்டிய மாதமாகும்.
கடகம் சந்திரனுடைய வீடு. சூரியன் உயிருக்கானது. சந்திரன் உடலுக்கானது. எனவே சந்திரனுக்கான வீடான கடகத்தில் அதன் எதிர் கிரகம் சூரியன் அமரும்போது உடல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும்.
இந்த மாதத்தில் தாம்பத்ய உறவு ஆரம்பிப்பது சரியாக இருக்காது. தாம்பத்யத்தில் ஆரம்பத்திலேயே விரிசல், திருப்தியற்ற நிலை ஏற்படும். இதனா‌ல்தா‌ன் ஆடி மாத‌த்‌தி‌ல் பு‌திதாக மணமான மணம‌க்களை ‌பி‌ரி‌த்து வை‌ப்பது‌ம், மணமகளை தா‌ய் ‌‌வீ‌ட்டி‌ற்கு அழை‌த்து‌ச் செ‌ன்று‌விடு‌ம் வழமையு‌ம் உ‌ள்ளது. கிட்டத்தட்ட இதே சூழல் தான் மார்கழியிலும் நிலவுகிறது. மார்கழி தனுர் மாதம். தனு‌ர் எ‌ன்றா‌ல் வில் அம்பை குறிக்கும். அதாவது ஆயுத மாதம். அது கொலை புரிவதற்கான ஆயுதமாகக் கருதப்படுகிறது. வில் அம்பு என்றாலே அது வன்முறையைத்தான் குறிக்கும். அதில் சூரியன் அமரும். இதனா‌ல் எதையும் ஒருமுகப்படுத்த இயலாது. ‌வி‌ண்‌ணி‌ல் தனு‌ர் ந‌ட்ச‌த்‌திர‌க் கூ‌ட்ட‌ம் இரு‌க்கு‌ம் அமை‌ப்பை வை‌த்து‌த்தா‌ன் அதற்கான கு‌றியை அதாவது ‌வி‌ல் அ‌ம்பாக அறிஞர்கள் கு‌றி‌த்தா‌ர்க‌ள்.இ‌ந்த மாத‌ங்க‌ளி‌ல் தனித்த செயல்கள், தனது மனதை பக்குவப்படுத்திக் கொள்ளுதல் நல்லது. எந்த உய‌ர்க‌ல்‌வி, ப‌யி‌ற்‌சி‌க் க‌ல்‌வி‌யி‌ல் சேர்ந்தாலும் நல்ல வெற்றி தரும்தனுர் மாதம் என்பது தடுமாற்றம் தரும் மாதமாகு‌ம். சுய பரிசோதனை செய்யக்கூடிய மாதம். நமது பலம், பலவீனத்தை கண்டறிய வேண்டும். தானே தடுமாற்றம் செய்யும்போது இன்னொருவரை எப்படி வழி நடத்த முடியும். அதனா‌ல்தா‌ன் ‌திருமண‌ம் உ‌ள்‌ளி‌ட்ட உறவுக‌ள் ஏ‌ற்படு‌த்துவதை த‌வி‌‌ர்‌த்து‌ள்ளன‌ர்

No comments:

Post a Comment