Sunday, May 29, 2011

அன்பே சிவம்

இந்த உலகத்தில் நாம் பிறவி எடுத்திருப்பதன் நோக்கம் அன்பு உள்ளவர்களாக இருப்பதற்கே. நம் சுக துக்கத்தைக் காட்டிலும், நாம் அன்பு வைத்திருப்பவரின் சுகதுக்கமே பெரிது என்று நினைத்து அன்பு செய்யத் தொடங்கினால் அதுதான் மிகவும் உயர்வு.

எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்றால் யாராவது ஒருவரிடம் நமக்கு அன்பு இருக்க வேண்டும். யாரிடமும் பிரியம் இல்லாமல் ‘நாம்தான்’ என்று இருந்துவிட்டால் அந்த வாழ்க்கை வீண்.

உண்மையின் வடிவம்

அன்பு உண்மையின் வடிவம். வெறுப்பு பொய்யின் வடிவம். அன்பு இணைத்து வைக்கிறது. கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் உள்ள தூய அன்பில் எந்தவித வேற்றுமையும் கிடையாது.

அன்புதான் கணவன், மனைவியரிடையே தூய, புனித காதலாக உருவெடுக்கிறது. அன்பிற்கு வெகுமதி இல்லை. அன்பு அன்பிற்காகவே செய்யப்படுகிறது.

அன்பே சிவம்
அன்பே சிவம் , அன்பே சத்தியம், அன்பே நித்தியம், அன்பே ஆனந்தம், அன்பே பேரின்பம், அன்பே அனைத்துமாகும். அன்பினால் அடையமுடியாதது எதுவுமே இல்லை. இந்த பிரபஞ்சம் முழுவதும் அன்பு மயமானது. அன்புதான் கணவன், மனைவியரிடையே தூய புனித காதலாக உருவாகிறது.

அச்சமின்றி அன்பு செய்

அன்பிருக்குமானால் அங்கு அச்சம் இருக்க வழியில்லை. மதிப்பும் மரியாதையும், பண்பாட்டை வளர்ப்பதற்கு மிக, மிக இன்றியமையாதவை. பண்பாடு நம்மிடம் உருக்கொண்டபிறகு அதன் காரணமாக அமைதியும் சாந்தமும் மிக்க அன்பினை உள்ளம் சுவைத்து மகிழ்கிறது. உள்ளத்தில் மகிழ்ச்சி மிக்கவர்களே முயற்சியுடையவர்களாவர்.

பிரதிபலனையும், மறுஉதவியையும் எதிர்பார்க்கும் இடத்தில் அன்பை காணமுடியாது. அன்பு அச்சமறியாது. மனதில் அச்சம் இருக்கும் இடத்தில் அன்பு இருக்காது.

‘அன்பு செய்’ எல்லாவற்றிலும் மிகவும் உயர்வானதையே விரும்பு. இப்போது கீழ்மையான மற்றவை எல்லாம் தானே அகன்றுவிடும்

No comments:

Post a Comment