Monday, June 27, 2011

ஆன்மிக கதைகள்-24- பொய்க்கோபம் காட்டலாம்


ஒரு சாமியார் மிகவும் சாந்தமானவர். சீடர்கள் மீது அவர் காட்டும் அன்புக்கு அளவேயில்லை. எப்போதாவது, சீடர்கள் தவறு செய்தாலும், அவர்களை மிரட்டுவதற்காக, கோபம் வந்தது போல் முகத்தை வைத்துக் கொள்வாரே தவிர, நிஜத்தில் மனதிற்குள் கோபம் இருக்காது. ஒருநாள், ஒரு சீடன் அவருக்கு விசிறிக்கொண்டிருந்தான். சாமியார் சற்று தூக்கத்தில் இருந்தார். சீடனுக்கும் கண்ணைக் கட்டிவிட்டது. விசிறிக்கொண்டே இருந்தவனின், கை சற்று தாழ்ந்து, சாமியாரின் மூக்கில் விசிறி இடித்து விட்டது. அது பனை ஓலை விசிறி என்பதால், மூக்கில் சிறு கீறல் விழ, வலியெடுத்து வேகமாக எழுந்தார்.""முட்டாளே! தூங்கிக் கொண்டே விசிறி என் மூக்கை காயப்படுத்தி விட்டாயா? உன்னை என்ன செய்கிறேன்...பார்,'' என கோபித்தவர், அவனது தலையில் குட்ட கையை ஓங்கினார். கையில் ஒரு சிறு செம்பு மோதிரம் கிடந்தது. அதைக் கொண்டு தலையில் குட்டினால், அவன் தலையில் ரத்தம் வந்து விடுமே..என்று சிந்தித்தவர், அதைக் கழற்ற முயன்றார். அதற்குள், ""பாவம்! நம் சீடனுக்கும் உண்ட களைப்பில் தூக்கம் வந்துவிட்டது போலும்,' 'என்று நினைத்தபடியே,""சரி...சரி...இனிமேல் குருசேவை செய்யும் போது கவனமாக இரு,'' என்று சத்தம் போடுவது போல் நடித்துவிட்டு, மீண்டும் உறங்க ஆரம்பித்தார்.கோபம் வருவது இயற்கை. ஆனால், அது உடனே மறைந்து விட வேண்டும், புரிகிறதா!

No comments:

Post a Comment