Monday, June 27, 2011

ஆன்மிக கதைகள்»35சேவை விளக்கை ஏற்றுங்கள்

வடநாட்டில் கிருஷ்ணசந்திரன் என்ற அரசன் ஆட்சி செய்துவந்தான். செல்வத்தில் திளைத்த அவன், மக்களின் துன்பங்களைச் சிறிதும் கண்டு கொள்ளவில்லை. பக்தியோ, பணிவோ இல்லாமல் வாழ்ந்தான். தான் மட்டுமே வாழவேண்டும் என்பதே அவனது கொள்கை. ஒருநாள், மாறுவேடத்தில் தான் மட்டும் புறநகர்ப்பகுதிக்குக் கிளம்பினான். மாலைநேரம் என்பதால் மாடு மேய்ப்பவர்கள் மேய்ச்சலுக்கு சென்ற பசுக்களை ஓட்டிக் கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு முதியவரும், அவருடைய மகளும் அடக்கம். அந்தப் பெண் தன் அப்பாவிடம், ""அப்பா! பொழுது இருட்டிவிட்டது. வீட்டில் இருள் சூழ்ந்து கிடக்கக்கூடாது. அதனால் சீக்கிரம் சென்று விளக்கேற்ற வேண்டும். வாருங்கள் விரைவாகப்போகலாம்,'' என்றாள். இது மன்னனின் காதில் விழுந்தது. அந்தச் சொற்கள் ஏதோ பாமரப் பெண் பேசுவதாக கிருஷ்ணசந்திரனுக்குத் தோன்றவில்லை. அவனுக்குள் பெரிய மாறுதலை ஏற்படுத்தியது. அவன்மனதிற்குள் ஞானோதயம் தோன்றியது. ""இந்தச் சிறுபெண் இந்த வார்த்தைகளை
எனக்காகவே கூறியிருக்கிறாள். என் வாலிபப்பருவம் எல்லாம் கடந்துவிட்டது. இளமையைக் கடந்து
முதுமையின் தொடக்கத்திற்கு வந்துவிட்டேன். என் உள்ளமாகிய இல்லத்தில் இதுவரை இருளே சூழ்ந்திருந்தது. இருளில் விளக்கேற்றினால் எப்படி ஒளி கிடைக்குமோ, அதுபோல் சுயநலம் என்ற இருளை அகற்ற "பிறர்நலம்' என்ற தீபத்தை ஏற்றினால் மனஇருள் நீங்கும்,''என்று எண்ணினான். இத்தனை நாளும்மக்களுக்கு நன்மை செய்யாமல் இருந்தது பற்றி கடவுளிடம் வருத்தம் தெரிவித்தான். தன் வாழ்வில் மாறுதல் ஏற்படுத்திய அந்தச் சிறுமிக்குஏதாவது பரிசு கொடுக்க எண்ணிஅவளை தேடிப்பார்த்தான். அவள் தூரத்தில் சென்று விட்டாள். அவளுக்கு மானசீகமாக தன் நன்றிகளைக் காணிக்கையாக்கினான். தன்அரண்மனைக்குத் திரும்பிய கிருஷ்ணசந்திரன், தன் தோட்டத்தில் இருந்த கிருஷ்ணாலயத்திற்குச் சென்று தன் கையினாலேயே பல தீபங்களை ஏற்றி வைத்தான். ஏற்றிய தீபங்களின்சுடரொளி போன்று அவன் உள்ளமும் பிரகாசித்தது. தன் செல்வம் அனைத்தையும் ஏழைகளுக்குதானமாக கொடுக்க முடிவுசெய்தான். தீபாவளி நன்னாளில் நமதுமனதிலும்பிறருக்கு சேவை செய்தல் என்ற விளக்கைஏற்றுவோம். சுயநலத்தை மறப்போம்

No comments:

Post a Comment