Monday, June 27, 2011

ஆன்மிக கதைகள் -39 இறைவன் இதயங்களை அல்லவா தேடுகிறான்!

அழகாக இல்லையே என வருத்தப்படுபவர்கள் இந்த உலகில் ஏராளமாக இருக்கிறார்கள். கருப்பாக இருப்பவர்களை "ஈஸ்வரன் கோயில் எண்ணெய் சட்டி, விளக்கெண்ணெய், கருப்பன்'' என்றெல்லாம் பட்டப்பெயரிட்டு கேலி செய்பவர்களைக் காண்கிறோம். அவலட்சணமானவர்களை இன்னும் மோசமாக சித்தரித்து வார்த்தைகளைக் கொட்டுவார்கள்.
அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனைத் தெரியாதவர்கள் இல்லை. இவருக்கு அழகு என்பது எள்ளளவும் இல்லை. இதை லிங்கனே ஒப்புக்கொண்டிருக்கிறார். தன் முகத்தைப் பார்த்து, ""இப்படியும் ஒரு முகமா?'' என்று தானே சிரித்துக் கொள்வாராம். டக்ளஸ் என்ற செனட்டர் அவரிடம், ""உங்களுக்கு இரண்டு முகங்கள் இருக்கின்றன,'' என கேலி செய்வாõரம்.
அதற்கு லிங்கன்,""இல்லையே! இந்த ஒன்றைத்தானே நீண்டகாலமாக வைத்துக் கொண்டுள்ளேன்.நீங்கள் சொல்வது போல், எனக்கு இரண்டு முகம் இருக்கிறதென்றால், இன்னொன்றை எங்கே?'' என்று பதிலளித்தாராம் லிங்கன். இப்படி, அவரது முகம் பலவிதங்களில் கேலிக்குள்ளானது.
ஒருமுறை, லிங்கன் காட்டுவழியே நடந்து சென்றார். அப்போது, ஒரு பெண் குதிரையில் ஒய்யாரமாக வந்தாள்.
""யார் நீ? ''
""நான் தான் ஆபிரகாம் லிங்கன்''
""உன்னை எதற்கு அழைத்தேன் தெரியுமா?''
""தெரியாதே!''
""இனி நீ வெளியே வரக்கூடாது.''
""ஏன்?''
""நீ அவலட்சணமாக இருக்கிறாய்.
உன்னைப் பார்க்க சகிக்கவில்லை. எல்லாரும் <உன் முகத்தைப் பார்த்து முகம் சுளிப்பார்கள். மற்றவர்களை முகம் சுளிக்க வைப்பதற்காகத்தான் நீ வெளியே நடமாடுகிறாயா?'' என சொல்லிவிட்டு வேகமாகப் போய்விட்டாள்.
ஆனால், உண்மையில் ஆபிரகாம் லிங்கன் உலகமக்களால் இன்றும் மதிக்கப்படுகிறார். அவரது புறத்தோற்றத்தை விட அகத்தோற்றமே பெருமைக்குரியதாக உள்ளது. அவர் ஏழைகள் மீது இரக்கம் செலுத்தினார். அடிமை விலங்கை உடைக்க பாடுபட்டார். அவரது மன<உறுதியும், தியாகமும் இன்றும் மதிக்கப்படுகிறது.
இன்று உலகம் வெளித்தோற்றத்துக்கு முக்கியத்துவம் அளித்து ஏமாந்து போகிறது. முக அழகுள்ளவர்கள் எல்லாம் நல்லவர்களாக இருப்பதில்லை. அழகற்றவர்களில் பலர் அன்பானவர்களாக இருக்கிறார்கள். அவர்களைக் கணவனாகவோ, மனைவியாகவோ பெற்றவர்கள் நிம்மதியாக காலம் தள்ளுகிறார்கள். மனிதன் தான் முகத்தைப் பார்க்கிறான். இறைவன் இதயங்களை அல்லவா தேடுகிறான்!

No comments:

Post a Comment